மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பாலுச்சாமி என்பவருடைய மகன்காளன அழகர் முருகன் ஜெயக்குமார் சரவணகுமார் செந்தில்குமார் ஆகியோருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களான கிளாட்வே , ஜெயபாரத் மற்றும் அன்னை பாரத் மற்றும் கிளாட்வே கிரீன் சிட்டி ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு சொந்தமான பத்துக்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.








முறையாக வருமான வரி செலுத்தாதது அதிகளவிற்காக சொத்து  போன்ற பல்வேறு புகார்களின் அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான உரிமையாளர்கள் மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானவரிச் சோதனையை முன்னிட்டு அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 




 





இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் பகுதியில் உள்ள ஆர்.ஆர் கட்டுமான நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மதுரையில் 10 இடத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 10 இடத்திலும் வருமான வருத்துறையினர் சோதனை செய்து வருவது குறிப்பிடதக்கது. சோதனை முடிவில் கூடுதல் தகவல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.