சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தின் வரலாறு பாண்டிய மன்னர்களிலிருந்தே தொடங்குகிறது.
Telangana Election Results: ஆட்சியை இழந்த சந்திரசேகர் ராவ்: தோல்விக்கான காரணங்கள் என்ன? - ஓர் அலசல்
தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் சோழர் மற்றும் சேரர்களுடன் இணைந்து சிலம்பாட்டத்தை மேம்படுத்தினர். மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். தமிழ் இலக்கியத்தின் சிலப்பதிகாரம், கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, சிலம்பம் தண்டுகள், வாள்கள், முத்துக்கள் மற்றும் கவசங்களை வெளிநாட்டு வணிகர்களுக்கு விற்பனை செய்வதைக் குறிக்கிறது. மதுரையில் உள்ள பழங்கால வர்த்தக மையம் ரோமானியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள் மற்றும் பண்டைய திராவிட மன்னர்களுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தவர்களால் பெரும்பாலும் வசித்ததாகக் கூறப்படுகிறது. சிலம்பாட்டம் அப்போது பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருந்தது. சிலம்பம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகளவில் புகழ்பெற்று வருகிறது.
இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு தின விழாவை முன்னிட்டு செம்மை சிலம்பாட்ட அமைப்பின் சார்பாக சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் சாகச நிகழ்ச்சியை நடத்தினார்கள். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு 15 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து கொண்டே தொடர்ந்து நான்கு மணி நேரமாக சிலம்பம் சுற்றி இந்தியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்து உலக சாதனை படைத்தனர்.
Election Results 2023 LIVE: தெலங்கானாவுடனான எங்களின் பிணைப்பு உடைக்க முடியாதது - பிரதமர் மோடி ட்வீட்