IND Vs AUS LIVE Score: பரபரப்பான ஆட்டம்; 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!
India Vs Australia 5th T20 Live Updates: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி குறித்த லைவ அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
த. மோகன்ராஜ் மணிவேலன்Last Updated: 03 Dec 2023 10:33 PM

Background
IND Vs AUS 5th T20: பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 தொடர்:அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது...More
IND Vs AUS 5th T20: பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 தொடர்:அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்தியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளயாடி வருகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது. நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளில், இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று 3-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி மற்றும் 5வது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது.இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்:அதன்படி, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதன் நேரலையை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி கடைசி போட்டியிலும் வெற்றி பெற தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், ஆறுதல் வெற்றியை பெற ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.பலம் - பலவீனங்கள்:ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானங்களில் போட்டி நடைபெறுவது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ரிங்கு சிங் அதிரடியான பினிஷிங்கை தொடர்ந்து வழங்கி வருகிறார். முதல் 3 போட்டிகளில் ரன்களை வாரிக்கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள், ராய்பூர் போட்டியில் சிக்கனமாக ரன்களை கொடுத்து தொடரை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தனர். மறுமுனையில், ஆஸ்திரேலிய அணி நிலைத்து நின்று ஆடக்கூடிய அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இன்றி திணற் வருகிறது. அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருப்பதும், ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இன்றைய போட்டியிலாவது அவர்களது பந்துவீச்சு எடுபடுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.மைதானம் எப்படி?பெங்களூரு சின்னசாமி மைதானம் அளவில் சிறியது என்பதால் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும். இதனால், பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்த மிகுந்த சிரமப்படுவர். பனியும் போட்டியின் இரண்டாம் பாதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதனை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்ச தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது. உத்தேச அணி விவரம்:இந்திய அணி:யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா/ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்ஆஸ்திரேலியா: மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, மேத்யூ வேட் (கேப்டன்), கிரீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா, கேன் ரிச்சர்ட்சன்
IND Vs AUS LIVE Score: பரபரப்பான ஆட்டம்; 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!
ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.