மதுரை திருமலை நாயக்கர் மஹால் பின்புறத்தில் பழமையான கட்டடம் இடிந்து விபத்து; வீட்டுக்குள் சிக்கிய மூதாட்டியை பத்திரமாக மீட்ட மீட்புத்துறையினர்.


மனநல பாதிக்கப்பட்ட ஜெயகிருஷ்ணன் மற்றும் தாயாரை காவல்துறையினர் காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.


மதுரை திருமலை நாயக்கர் மஹால் பின்புறத்தில் உள்ள மஹால் 4வது தெரு பகுதியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன். இவருக்கு சொந்தமான பழமையான வீட்டில் தாயார் சரளாவுடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜெயகிருஷ்ணன் மனநல பாதிப்புக்குள்ளானார்.






இந்த நிலையில் அவரது வீட்டின் மேல் தளத்தில் சுவர் சேதமடைந்த நிலையில் அதனை ஜெயகிருஷ்ணனே இடித்து செங்கலை கொண்டு வீடு கட்ட முயற்சித்துள்ளார். இதற்காக மேல் தளத்தில் உள்ள சுவரை இடிக்க முற்பட்டபோது வீட்டின் மேல் தளம் இடிந்து விபத்துக்குள்ளானது.




இதில் வீட்டின் கீழ் தளத்தில் இருந்த ஜெயகிருஷ்ணனின் தாயார் சரளா கதவுகளைத் திறக்க முடியாமல் வீட்டுக்குள் சிக்கிக்கொண்டார். இந்த தகவல் அறிந்து வந்த பெரியார் நிலையம் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கி இருந்த மூதாட்டி சரளாவை கதவுகளை அறுத்து மீட்டனர். இந்த கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் ஜெயகிருஷ்ணன் அவரது தாயார் சரளா சிறு காயத்துடன் உயிர்தப்பினர்.




’ - Ind Vs Aus T20: 5 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத ராய்பூர் மைதானம் - இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 போட்டி நடைபெறுமா?


தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு வந்த தெற்கு வாசல் காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். வீட்டின் மேல் தளம் முழுமையாக இடியாத நிலையில் மாநகராட்சி சார்பாக பொக்லைன் இயந்திரம் மூலம் முழுமையாக அகற்றப்பட்டது. தொடர்ந்து மனநல பாதிக்கப்பட்ட ஜெயகிருஷ்ணன் மற்றும் தாயாரை காவல்துறையினர் காப்பாற்றிற்கு அழைத்துச் சென்றனர். மேலும் இந்த விபத்துக்குள்ளான வீட்டிற்கு மதுரை மாநகராட்சி சார்பாக ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.