போடிநாயக்கனூர் அருகே  அணைக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடியில்  13 குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் பொன்னுக்கு வீங்கி அம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு திண்டுக்கல் மண்டல பூச்சியியல் துறை இணை இயக்குனர் விக்டர் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை தொற்றுநோய் பிரிவு அதிகாரிகள் நேரில் ஆய்வு .



பொன்னுக்கு வீங்கி அம்மை தொற்றால் பள்ளிக் குழந்தைகள் பாதிப்பு.. தேனியில் அதிகாரிகள் ஆய்வு


இன்றும் ஒரு சில மாணவர்களுக்கு காய்ச்சல் மற்றும் பொன்னுக்கு வீங்கி அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ரத்தப் பரிசோதனை மற்றும்  மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகில் உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளியில் சுமார் 57 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.


"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!




இந்நிலையில் ஒரே நாளில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி பள்ளியில் பயிலும் குழந்தைகள் 13 பேருக்கு காய்ச்சல் மற்றும் பொண்ணுக்கு வீங்கி அம்மை தொற்று பரவிய நிலையில் மீனாட்சிபுரம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வில் 13 நபர்கள் பள்ளிக்கு வராதது கண்டறியப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து இன்று காலை தேனி மாவட்டம் சுகாதாரத்துறை மூலம் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் மற்றும் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகம் நடைபெற்று வருகிறது.


Watch video : அம்பானி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலித்த 'ஜெய் ஹோ'.. ஏ.ஆர். ரஹ்மான் செய்த மேஜிக்!


திண்டுக்கல் மாவட்ட பூச்சியியல் துறை இணை இயக்குனர் விக்டர், தேனி மாவட்ட சுகாதாரத்துறை தொற்றுநோயியல் பிரிவு மருத்துவர்கள் தலைமையில் மற்றும் சுகாதார பணியாளர்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொண்டு காய்ச்சல் உள்ளதா என்று கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.




இன்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பள்ளிக்கு வராத மாணவர்கள் வீடு தேடி சென்று பார்த்தபொழுது மேலும் சில மாணவர்கள் அம்மை தொற்று மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கும் ரத்த பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது.


ஊராட்சி சுகாதார பணியாளர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள நீர் தேக்க தொட்டி மற்றும் சாக்கடை கழிவுகளை ஆய்வு செய்து அவற்றை சுத்தப்படுத்தும்படி அறிவுறுத்தி சென்றுள்ளனர்.