பழனி அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோள பயிர்களை காட்டு  யானை சேதப்படுத்தியது. ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை காட்டிற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடைத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பழனி அருகே உள்ள ஆயக்குடி, கோம்பைப்பட்டி, சத்திரப்பட்டி, தேக்கந்தோட்டம், புளியம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் மலைப் பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.


"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!




இப்பகுதிகளில் மக்காச்சோளம், வெள்ளச் சோளம், கொய்யா, மா உள்ளிட்டவை அதிகளவில் பயிரிடப்பட்டுளளது. இதன்காரணமாக வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் அவ்வப்போது விவசாய நிலத்திற்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறாமல் தடுப்பதற்காக வனத்துறை சார்பில் அகழிகள் வெட்டப்பட்டும், சில இடங்களில் சூரிய ஒளி மின்சார வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் பழனி அருகே உள்ள கோம்பைப்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று புகுந்தது.


Watch video : அம்பானி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலித்த 'ஜெய் ஹோ'.. ஏ.ஆர். ரஹ்மான் செய்த மேஜிக்!




மேலும் அங்கு அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் மற்றும் அறுவடைக்காக காத்திருக்கும் பயிர்களை சேதப்படுத்தியது. இதனையடுத்து அங்கு காவலில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒட்டன்சத்திரம் வனத்துறை அதிகாரிகள் காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.


காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அகழிகள் அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில், பராமரிப்பின்றி தூர்ந்து போயுள்ளது. அதேபோல சூரிய ஒளி மின்சார கம்பி வேலிகள் சில இடங்களில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.




எனவே மின்சார வேலி அமைக்கப்படாத  வழிகள் மூலமாக காட்டுயானைகள் எளிதாக கிராமத்திற்குள் புகுந்து விடுவதாகவும், அவை பயிர்களை சேதப்படுத்துவது மட்டுமின்றி மனித உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படுத்துகிறது.


எனவே சூழ்ந்து போய் இல்லா அகழிகளை மீண்டும் தூர்வாரவும், சூரிய ஒளி மின்சார வேலிகள் அமைக்கப்படாத இடங்களில் உடனடியாக அமைத்து காட்டு யானைகள் கிராமங்களுக்குள் போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.