மதுபோதையில் கொடூரம்
மதுரை மாநகர் மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(36). அவரது மனைவி கனிமொழி (29). இந்த தம்பதி 3 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கார்த்திக் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று திரும்பிய நிலையில், அவ்வப்போது ஆட்டோ ஓட்டுவது போன்ற வேலை செய்துவந்துள்ளார். ஆனால் சில மாதங்களாக கார்த்திக் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்திவிட்டு தினசரி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு மதுபோதையில் வந்த கார்த்திக் போதையில் வாக்குவாதம் செய்துள்ளார்.
சப்பாத்திக் கட்டையால் தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த மனைவி கனிமொழி கார்த்திக்கை வீட்டிலிருந்து சப்பாத்திகட்டை, தோசை கரண்டியை வைத்து தாக்கியதில் முகம் முழுவதும் சிதைந்த நிலையில் கீழே விழுந்த பின்னர் அரிவாள்மனையால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த கார்த்திக் உயிரழந்தார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அளித்த. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கீரைத்துறை காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதையடுத்து மனைவி கனிமொழியை கீரைத்துறை காவல்துறையினர் கைது செய்து அழைத்துசென்றனர். முதற்கட்ட விசாரணையில் கார்த்திக் இன்று மதியம் மதுபோதையில் ஆபாசமாக பேசியதோடு மனைவி கனிமொழியையும், குழந்தைகளையும் கடுமையாக தாக்கி அடித்ததால் ஆத்திரமடைந்து கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - CM Stalin: காவிரி விவகாரம்.. நாளை சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - CM Stalin On Neet: ஒட்டுமொத்த இந்தியாவுமே நீட் தேர்வை எதிர்க்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்