ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்களின் உரிமையாளர் முகேஷ் அம்பானி இந்தியாவின் மிக முக்கியமான பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் கடந்த ஜூன் 12ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்சன் சென்டரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மார்ச் மாதம் முதலே திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டங்கள் தொடங்கின.

 

உலக நாடுகளே திரும்பி பார்க்கும் அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த திருமணத்துக்கு சுமார் 4000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 


 

 

இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் திரை பிரபலங்கள், தொழில் அதிபர்கள், விவிஐபிக்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஏராளமானோர் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

 

திருமண கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வந்த பிரபலங்களின் விமான செலவு, 5 ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்கான ஏற்பாடுகள் என அனைத்தையும் அம்பானியே ஏற்றுக்கொண்டுள்ளார். திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பிரபலங்கள் மட்டுமின்றி ஏராளமான பிரபலங்கள் மரியாதை நிமித்தமாகவும் கலந்து கொண்டனர். 

 


 

இந்த பிரம்மாண்ட திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மங்கள் உட்சவ் நிகழ்வில் ஒரு பகுதியாக ஆஸ்கர் நாயகன் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் மேஜிக்கல் மொமெண்ட் ஏற்படுத்தி இருந்தார். ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வரும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான், சுக்விந்தர் சிங் என இரு இசை மேஸ்ட்ரோக்களும் இணைந்து 'ஜெய் ஹோ' பாடலை ரீ கிரியேட் செய்தனர். 

 

இந்த வீடியோ சோசியல் மீடியா எங்கும் புயலை கிளப்பி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 





மேலும் ஏ.ஆர். ரஹ்மான் தேரா பினா, முகாபலா, தில் சே உள்ளிட்ட பாடல்களை பாடி உருக வைத்துவிட்டார். மற்றொரு பிரபலமான இசை கலைஞரான ஸ்ரேயா கோஷல் ஹெக்னா ஹி க்யா, சகா சக் உள்ளிட்ட பாடல்களை பாடி அசத்தினார். இந்த அசத்தலான பர்ஃபார்மன்ஸ்கள் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தாளிகளை இசை மழையில் நனைய வைத்தது. இந்த வீடியோக்கள்  சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகின்றன.