தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன் குடியிருப்பு மலையடிவாரம்,  வண்ணாத்தி பாறை மலை உச்சியில் பிரசித்திபெற்ற மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள இந்த கோவில் பகுதி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அப்போது தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.




இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.  இதையொட்டி உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்ட முன்னேற்பாடு பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் கடந்த 25-ஆம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையை கூடலூர் வனத்துறையினர் சீரமைத்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நடைபாதைகளில் கண்காணிப்பு கேமரா அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. 


Today's Headlines: ரூ. 105 கடந்த பெட்ரோல் விலை... இந்திய அணி தோல்வி...94 வது ஆஸ்கர் விருது விழா...இன்னும் பல!


இந்த பணிகளை ஆய்வு செய்ய உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, வட்டாட்சியர் கவுசல்யா, கூடலூர் வனவர் சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் ஆயுதப்படை போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் குழுவினர், தேக்கடி வனப்பகுதி வழியாக 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கண்ணகி கோவிலுக்கு ஜீப்பில் சென்றனர்.


Breaking News LIVE: ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..! 9 மாதங்களுக்கு பிறகு முன்னாள் மாணவன் கைது..!



அங்கு கோவில் வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணிகளை பார்வையிட்டனர். மேலும் கோவிலை ஒட்டியுள்ள சுனை பகுதியில் பந்தல் அமைத்தல், குடிநீர் தொட்டி வைத்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.  பின்னர் கோவிலில் இருந்து தமிழக எல்லை பகுதியான அத்தியூத்து வழியாக 6.6 கிலோ மீட்டர் தூரம் பளியன் குடியிருப்பு பகுதி வரை அதிகாரிகள் நடந்து சென்று, பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் பாதைகளை கண்டறிந்தனர். பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் தமிழகத்திற்குள் திரும்பினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண


 


யூடியூப்பில் வீடியோக்களை காண