நாடுமுழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயங்கி வருகின்றனர்.  முன்னதாக, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கக்கூடாது.


விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் உரிமைகளை தட்டிப் பறிக்கக் கூடாது, மேலும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்த பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29,தேதிகளில் போராட்டம் நடத்தபப்டும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.




இதனையடுத்து, மார்ச் 28 (இன்று) நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், கூட்டுறவுத்துறை, நீதித்துறை, தொழில் பயிற்சி அலுவலர்கள் சங்கம், பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கம், உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், சுகாதார ஆய்வாளர்கள் சங்கம், அனைத்து மருந்தாளுநர்கள் சங்கம், சுகாதார போக்குவரத்து துறை ஊழியர் சங்கம், நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம், கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்டு 70க்கும் மேற்பட்ட சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.




இதன் எதிரொலியாக தென் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையாக உள்ள ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டிலிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அதிகளவில் அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளாவுக்கு 70 சதவீதம் காய்கறிகள் தினமும்  நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.




இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்றும் நாளையும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதனால் கேரளாவில் இருந்து பெரும்பாலான வியாபாரிகள் இன்று ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரவில்லை. மேலும் காய்கறி விலையும் மிகவும்  குறைந்து காணப்பட்டது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.80 முதல் ரூ.100 வரை விலை போனது. இதுபோல சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15, பல்லாரி ஒரு கிலோ ரூ.25, பீட்ரூட் ரூ.4, வெண்டைக்காய் ரூ.10,, சுைரக்காய் ரூ.2, பூசணிக்காய் ரூ.6, முருங்கை ரூ.32, மிளகாய் ரூ.28 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. வெளியூர் வியாபாரிகள் யாரும் வராததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் இன்று சுமார் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காமராஜர் மார்க்கெட், தக்காளி மார்க்கெட் ஆகியவை வியாபாரிகள், விவசாயிகள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண