மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள் ராமநாதபுரம் கல்லூரியில் ஏப்ரல் 4 ம் தேதி தொடங்கும் எனவும், மாணவர்கள் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து கல்வி பயில தயாராக வரவேண்டும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் செயல்படவுள்ள மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு என்று 4 நவீன வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் தயாராக உள்ளது. முதல் கட்டமாக எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வகுப்புகள் எடுக்க உள்ளதாக தெரிய வருகிறது.



மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் நிகழாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கான மாணவர்களை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கடந்த மாதம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.


நடப்பு ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கல்வி பயில 500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்த நிலையில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் செயல்படவுள்ள மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு என்று 4 நவீன வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் தயாராக உள்ளது. முதல் கட்டமாக எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வகுப்புகள் எடுக்க உள்ளனர்.


முன்னதாக, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என, கடந்த  2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு ஜூன் 18 ந்தேதி  எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையும் இடம் தேர்வு  செய்யப்பட்டது. மத்திய அரசின் சார்பில் கடந்த  2018 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற்ற மத்திய அரசின் சார்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.



இதனை தொடர்ந்து, தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் தோப்பூரில் ரூ.1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்காக,  பிரதமர்  கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதியன்று மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து,  11 மாதங்கள் கழித்து கடந்த  2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி  ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.


கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அதுவரை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்புகள் எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண