பெரியகுளம் நீதிமன்றத்தில் பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தென்கரை காவல்துறையினர் தப்பி ஓடிய விசாரணை கைதியை விரட்டி பிடித்தனர்.
CM MK Stalin: ”உழவர்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற திருட்டு வழக்கில் தேவதானப்பட்டியைச் சேர்ந்த தெய்வேந்திரன் (வயது 47) கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்காக பெரியகுளத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தேனி ஆயுதப்படை காவல்துறையினர் இருவர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர படுத்திய பின்பு அழைத்துச் செல்லும் பொழுது பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை அருகே வந்த பொழுது விசாரணை கைதி தேவேந்திரன் காவலர்களை தள்ளி விட்டு தப்பி ஓடி அருகே உள்ள வராக நதி ஆற்றில் குதித்து தப்பி செல்ல ஓடியுள்ளார் .
Studio Green : மும்பையில் கிளையை துவங்கிய ஸ்டுடியோ கிரீன்..திறந்து வைத்து வாழ்த்திய அப்பா - மகன் !
மேலும், விசாரணை கைதியை அழைத்து வந்த ஆயுதப்படை காவலர்கள் தப்பி ஓடிய தெய்வேந்திரனை விரட்டிப் பிடிக்க பின்தொடர்ந்த பொழுது அந்த வழியாக வந்த தென்கரை காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் சம்பவத்தை அறிந்து வராக நதி ஆற்றின் எதிர் திசையில் சென்று தப்பி ஓடிய விசாரணை கைதியை மடக்கி பிடித்தனர். இதனை அடுத்து தப்பி ஓடிய விசாரணை கைதி தெய்வேந்திரனை தென்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் சிறை கைதி மற்றும் விசாரணை கைதிகளுக்கு கைவிலங்கு எதுவும் போடாமல் அழைத்துச் செல்வதால் தப்பி ஓடும் சம்பவம் இரண்டாவது முறையாக அரங்கேறி உள்ளது. இவ்வாறு கைதிகள் தப்பி ஓடும் நிலையில் பாதுகாப்பிற்கு வந்த காவலர்கள் தான் மெமோ, சஸ்பெண்ட் உள்ளிட்ட தண்டனைகளுக்கு ஆளாகின்றனர்.