பருவநிலை  மாற்றத்தால் பெரியகுளம் பகுதியில் மாம் பூக்கள் பூக்காத நிலையில் மா விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. பூக்கள் பூக்க மருந்து தெளித்தும் பூக்கள் பூக்காததால் இந்த ஆண்டு மா விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பையும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் நிலை உள்ளதால் மா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


Vijay TVK: ஜெயலலிதாவையே மிஞ்சும் விஜய்! பக்கா ப்ளான் ரெடி! தளபதிக்காக தயாரான த.வெ.க நிர்வாகிகள்!




தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன்  சுற்று வட்டாரப் பகுதிகளான கும்பக்கரை, செலும்பு, முருகமலை, சோத்துப்பாறை, மஞ்சளாரு, லட்சுமிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மா உற்பத்தியில் சேலம், கிருஷ்ணகிரிக்கு, அடுத்தப்படியாக பெரியகுளம் இரண்டாம் இடம் வைக்கிறது. இங்கு அல்போன்சா, பங்கனபள்ளி, காலைபாடி, இமாமஸ், செந்தூராம், காசா லட்டு, கல்லாமை போன்ற பல்வேறு ரகங்களில் மா விவசாயிகள் விளைவிக்கின்றனர்.


Minister Thangam Thennarasu: தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு.. கடந்து வந்த பாதை..




இந்நிலையில் வழக்கமாக டிசம்பர் மாத இறுதியில் இருந்து ஜனவரி மாத இறுதிக்குள் மாம் பூக்கள் பூப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு பெய்ய துவங்கிய வடகிழக்கு பருவமழையானது  இந்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி வரை நீடித்ததால் டிசம்பர் ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு இல்லாத நிலை ஏற்பட்டு மாம் பூக்கள் பூப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.மேலும் மாம் பூக்கள் பூப்பதற்காக விவசாயிகள் மருந்து தெளித்தும் மாம் பூக்கள் பூக்காத நிலையில்  மா மரங்களில் இளம் தளிர்கள் வரத் தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டு மா விவசாயம் பெரியகுளம் பகுதியில் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Tamil Nadu Budget 2024: கலைஞர் கனவுத் திட்டத்தில் 8 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டப்படும் - பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு




இதுகுறித்து மா விவசாயிகள் கூறுகையில், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மகசூல் தரக்கூடிய விவசாயத்தை நம்பி உள்ள விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டும் பருவநிலை மாற்றத்தால் மா பூக்கள் பூக்காத நிலையில் மா விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இளப்பு ஏற்படும் என்பதோடு, மா விவசாயத்தால்  ஆண்டுக்கு 400 முதல் 500 கோடி ரூபாய் வரை நடைபெறும் வர்த்தகம் இந்த ஆண்டு முற்றிலும் பாதிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.  எனவே இந்த ஆண்டு பெரியகுளம் பகுதியில் மா விவசாய முற்றிலும் பொய்த்துப் போகும் நிலை ஏற்படும் சூழல் உள்ளதால் அரசு இதை கண்காணித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.