தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கும்பகரை, சோத்துபாறை, தொண்டகத்தி, அழகாமடை, தென்கரை ஆகிய பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் மா மரங்கள் வளர்க்கபட்டு, மா விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு அதிக விளைச்சல் கிடைக்கும் என எண்ணி இருந்த விவசாயிகளுக்கு பூ பூக்கும் சமயத்தில் பெய்த கனமழை மாங்காய் விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்தது.


Vikram Health: ”லேசான நெஞ்சுவலி.. இப்படியில்லை.. சீக்கிரம் டிஸ்சார்ஜ்..” : விக்ரம் மேனேஜர் கொடுத்த விளக்கம்..




பூக்கள் அனைத்தும் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் உதிர்ந்தும், அழகியும் போன நிலை விளைச்சலை பெருமளவில் குறைத்தது. மேலும் இந்த பகுதியில் உள்ள மாடுகள் மற்றும் காட்டு பண்றிகள் மாந்தோப்பில் புகுந்தும் மாங்காயினை கடுமையாக சேதப்படுத்தியது. இதன் காரணமாகவும் இந்த பகுதியில் மாங்காய் உற்பத்தி மிகவும் கடுமையாக பாதிக்கபட்டது.


Shinzo Abe Death: சுடப்பட்டு சிகிச்சையில் இருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே உயிரிழப்பு




விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மாங்காய்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதன் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. தற்போது காசா வகை மாங்காய் 1 டன் 35 ஆயிரம் ரூபாய்க்கும், நாட்டுக்காய் வகை 15 ஆயிரம் ரூபாய்க்கும், காளைப்பாடி வகை 1 லட்சத்திற்கும், நடுத்தர நாட்டுக்காய் 15 ஆயிரத்திற்கும், இரண்டாம் ரகம் காசா வகை மாங்காய் 25 ஆயிரம் ரூபாய்க்கும் விலை போகிறது.


Ponniyin Selvan Teaser Launch LIVE: போர்களத்திற்கு தயாரான பொன்னியின் செல்வன்... இன்று மாலை டீசர் வெளியீடு..!




கடந்த ஆண்டு ஒரு டன் கல்லாமை வகை மாங்காய் 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இந்த ஆண்டு அது 2 மாதங்களுக்கு முன்பு 25 ஆயிரம் ரூபாயாகவும், தற்போது 55 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது. பெரியகுளம் பகுதியில் விளையும் மாங்காய்கள் பெரும்பாலும் கேரளா மாநிலத்திற்கும், பழ சாறு தயாரிக்கும் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடும் பாதிப்பினை சந்தித்த போதிலும் மா விவசாயிகளுக்கு இந்த விலை ஏற்றம் மிகப்பெரிய ஆறுதலை தந்துள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் மாங்காய் விலை செல்வதால் மா விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண