பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே சுடப்பட்ட நிலையில், தற்போது அவர் உயிரிழிந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காலையில் பேசிய தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, முன்னாள் பிரதமர் அபே நாராவில் சுடப்பட்டதாக தெரிவித்தார்.
சுட்டு கொலை செய்யப்பட்ட நபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ தெரிவித்துள்ளார். சுட்டவரின் பெயர் 41 வயதான டெட்சுயா யமகாமி என தெரிய வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அபே சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த ஷின்ஸோ அபேவை பின்னால் இருந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த நபர் தப்பி ஓட முயன்றபோது, போலீசார் அவரை துரத்திச் சென்று சுற்று வளைத்து பிடித்தனர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது, அதை நேரடியாக பார்த்த இளம்பெண் இதுகுறித்து கூறுகையில், "அவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த ஒருவர், அவரை சுட்டார்.
முதல் குண்டு வெடித்தபோது ஒரு பொம்மை துப்பாக்கியிலிருந்து குண்டு வெடித்தது போல இருந்தது. அவர் விழவில்லை, பின்னர், ஒரு பெரிய குண்டு வெடித்தது. இரண்டாவது குண்டு வெடித்தபோது தெளிவாக தெரிந்தது. நீங்கள் தீப்பொறி மற்றும் புகையை தெளிவாக பார்க்க முடிந்தது. இரண்டாவது குண்டு வெடித்த பிறகு, மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவருக்கு இதய மசாஜ் செய்தனர்" என்றார்.
இதையடுத்து, இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்