திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06887) மற்றும் காரைக்குடி - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06888) முறையே ஜூலை 18 மற்றும் ஜூலை 19 முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த ரயில்களை பயணிகளின் வசதிக்காக முன்பு அறிவித்த தேதிக்கு முன்னதாக இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மற்றும் காரைக்குடி - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ஆகியவை முறையே ஜூலை 10 மற்றும் ஜூலை 11 ஆகிய நாட்கள் முதல் சேவையை துவங்குகிறது.
ரயில்வே தொடர்பான கூடுதல் செய்திகள் படிக்க கிளிக் செய்யவும் - ரயில்வே அறிவிப்பு : ஆடி அமாவாசை தர்ப்பணம்.. மதுரை - காசி உலா ரயிலில் பயணிக்க எப்படி பதிவுசெய்வது?
மேலும் திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு முறையில் சனிக்கிழமைகளிலும், காரைக்குடி - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்பட மாட்டாது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்