கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை விட்டு , விட்டு கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- வெளியான அறிவிப்பு
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மழைப்பொழிவு குறைந்து அருவிக்கு வரும் நீரின் அளவு குறைந்து சீராகும் வரை இந்த தடை தொடரும் என தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் தெரிவித்துள்ளனர்.
மேலும் தேனி போடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலும் பலத்த மழையின் காரணமாக தொடர்ந்து 10 நாட்களாக கொட்டகுடி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது வெள்ளபெருக்கு. இரவு நேரங்களில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கெட்டக்குடி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Breaking News LIVE 12 Oct : அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. மேலும் ரூ.200 உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலை குரங்கணி மலைப்பகுதியில் உருவாகும் கொட்டகுடி ஆறு வைகை அணையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்று. வட கிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கு கரை புரண்டு ஓடுகிறது. பகல் நேரத்தில் குறைந்த வெள்ளமாகவும் மாலையில் இருந்து இரவு நேரங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
இதன் காரணமாக கெட்டக்குடி ஆற்றின் கரை பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் விவசாய நிலம் வைத்திருக்கும் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் விவசாய நிலங்களுக்கு கடந்து செல்ல முயற்சிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம், என பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிறார்களை ஆற்றுப்பகுதியை குளிக்க அனுப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.