Breaking News LIVE 12 Oct : கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஜிப் லைனில் பழுது: சிக்கிய பெண்கள் மீட்பு
Breaking LIVE News: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு
வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப் லைனில் பழுது ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிப் லைனில் சிக்கிய 2 பெண்கள் 20 நிமிடங்களாக தவித்து வந்ததாகவும் அவர்கள் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Kombuseevi : பொன்ராம் இயக்கத்தில் சரத் குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்தது படக்குழு இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்
தருமபுரம் மழலையர் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வித்யாபியாசம் என்கிற ஆரம்பக் கல்வி நிகழ்ச்சி , யானை, குதிரை, ஆடு உள்ளிட்ட மங்கல சின்னங்களுடன் வாத்தியங்கள் முழங்க மாணவர்களுக்கு வரவேற்பு; தருமபுரம் ஆதீனம் மாணாக்கர்களின் நாக்கில் மயிலிறகால் தேன் தடவி நெல்லில் அகரம் எழுத வைத்து ஆசி வழங்கினார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விஜயவாடா வழியாக அகமதாபாத் நவாஜீவன் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதம்
காலை 10.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் 6 மணி நேரம் தாமதமாக மாலை 4 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அகமதாபாத் செல்லக் கூடிய நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வழக்கமாக புறப்படும் விஜயவாடா வழியாக அகமதாபாத் சென்றடையும் இந்நிலையில் கவரப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாக 12.10 மணிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது
இந்நிலையில் தற்போது நப்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் மேலும் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பாக காலை 10.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இன்று மாலை 4 மணி அளவில் 6 மணி நேரம் தாமதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் தென்னக ரயில்வே அறிவிப்பு.... இதனால் காலை ஆறு மணி முதலாக விஜயவாடா வழியாக அகமதாபாத் செல்லக்கூடிய மக்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காத்திருக்கக்கூடிய சூழ் ஏற்பட்டுள்ளது
தேனி: பெரியகுளம் பகுதியில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்கத் தடை!
விஜயதசமியை முன்னிட்டு விழுப்புரத்திலுள்ள பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் ஹைக்கிரீவர் சன்னதியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு கல்வியின் துவக்கமாக ”அ” என்ற எழுத்தினை அரிசியில் எழுதி முதல் கல்வியை துவக்கி வைத்தனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ56,960க்கு விற்பனை; ஒரு கிராம் ரூ.7,120க்கு விற்பனை
கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்தால் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. கிடைக்கும் ரயில்களில் ஏறி ஊருக்குச் செல்ல முயல்வதால், ரயில்களில் முண்டியடித்து ஏறி வருகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து ஆயுத பூஜை கொண்டாட்டம்.
தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தும் ஆயுதங்களை சுத்தம் செய்து ஆயுத பூஜையை கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை கழுவி சுத்தம் செய்து, ஆட்டோக்களுக்கு பட்டையிட்டு ஆயுத பூஜையை கொண்டாடினர். இந்த ஆயுத பூஜை விழாவில் அனைத்து மதத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஒன்றிணைந்து ஆயுத பூஜையைக் கொண்டாடினர்.
இதே போன்ற சேலத்தில் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஸ்டாண்ட், பட்டறைகள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை விழாவினை கொண்டாடி வருகின்றனர்.
தென்திருப்பதி அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய புரட்டாசி மாத தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகன திருவீதி உலா காட்சி தருகிறார்.
இந்நிலையில் புரட்டாசி மாத முக்கிய நிகழ்வான புரட்டாசி மாத தேரோட்டம் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை தேருக்கு வந்த ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய கல்யாண வெங்கட்ரமண சுவாமி தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் இழுத்தனர்.
தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலய திருத்தேர் ஆலய நான்கு மட வாசல் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் தேர் நிலைக்கு வந்தடைந்தது.
புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டும் ,புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமை முன்னிட்டும் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் ஆலய வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண வெங்கட்ராமன் ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்து வந்தனர்.
ஏராளமான பக்தர்கள் வருகை ஒட்டி கரூர் மாநகர் மற்றும் தாந்தோன்றி மலை காவலத்துக்குட்பட்ட 300 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேர் கிரிவலப் பாதையை சுற்றி வருவதால் காலை 8:00 மணி முதல் 10 மணி வரை இப்பகுதியில் மின் தடை இருக்கும் என மின்வாரிய அதிகாரிகளும் தகவல் தெரிவித்துள்ளனர். புரட்டாசி மாத திருத்தேரை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானத்தை பக்தர்களுக்காக சமூக ஆர்வலர்கள் வழங்கி வருகின்றனர்.
கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மழை பெய்து வருவதால் அங்கு மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Tamilnadu Kavaraipettai Train Collision : கவரைப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தில் தாறுமாறாக கிடக்கும் ரயில் பெட்டிகள். மீட்புப் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Tamilnadu Kavaraipettai Train Collision : கவரைப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவினர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்வர். ரயிலை இயக்குதல், சிக்னல், தொழில்நுட்ப கோளாறுக்கான காரணங்களை ஆராய்ந்து அதன் அறிக்கையை சமர்ப்பிப்பர்.
மனிதத் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமா கண்டுபிடிக்கப்பட்டு, அதன்படி உயர்மட்டக் குழுவினர் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வர்.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் காலையில் பணிக்குச் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Background
- திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து – 11 பெட்டிகள் தடம்புரண்டதில் 2 பெட்டிகளில் பற்றி எரிந்த தீ
- கவரப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கிய அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்பு – காயமடைந்த 19 பேருக்கு சிகிச்சை
- கவரப்பேட்டை ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஆறுதல்
- கவரப்பேட்டை ரயில் விபத்து எதிரொலி; சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே இரு மார்க்கத்திலும் மாற்று வழித்தடங்களில் ரயில்கள் இயக்கம்
- கவரப்பேட்டை ரயில் விபத்து பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம்
- கவரப்பேட்டை ரயில் விபத்து; பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் செய்யும் பணியை துரிதப்படுத்த அமைச்சர், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- கவரப்பேட்டை ரயில் விபத்து; உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது தெற்கு ரயில்வே
- தொடர் ரயில் விபத்துக்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
- ரயிலில் பயணித்த 1650 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
- சக்கரம் வெளிவராத காரணத்தால் திருச்சியில் 2 மணி நேரம் வானிலே வட்டமடித்த விமானம் – 144 பயணிகளின் உயிரை சாமர்த்தியமாக மீட்ட விமானிகள்
- திருச்சியில் விமானிகள் மத்தியில் பயம் ஏற்படாமல் விமானத்தை பத்திரமாக இயக்கிய விமானிகளுக்கு குவியும் பாராட்டு
- ஏர் இந்தியா விமான தொழில்நுட்ப குழு குறித்து விசாரணை; மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்
- தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை;
- தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு அடுத்த 2நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் உமர் அப்துல்லா
- இந்தியாவில் ஊடுருவ 150 பயங்கரவாதிகள் காத்திருப்பு – எல்லை பாதுகாப்பு படைத் தலைவர் அசோக் அதிர்ச்சி தகவல்
- மகாராஷ்ட்ராவில் முதலமைச்சர் ஏக் நாத் ஷிண்டே – துணை முதல்வர் அஜித் பவார் இடையே கருத்து மோதல்
- கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்பு – தெலங்கானா அரசு கௌரவம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -