Breaking News LIVE: ஜூன் 10ம் தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் தரப்படும் - பள்ளிக்கல்வித்துறை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
ஜூன் 10ம் தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் தரப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி.
பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உரிமை கோருவதற்காக மோடி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேரில் சென்றுள்ளார்.
தென்காசி: பக்ரீத் பண்டிகையையொட்டி பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் இன்று நடைபெற்ற விற்பனையில் ஏராளமான வியாபாரிகள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்று போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்று வருகின்றனர். 5,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 40,000 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இன்று ஒரு நாள் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல்
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடுத்தர மக்களின் வருவாயை உயர்த்துவதை இலக்காக கொண்டு, இந்த ஆட்சியில் உழைப்போம் என மோடி தெரிவித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர்க்கட்சியினர் எதற்காக கொண்டாடுகிறார்கள் என தெரியவில்லை? ரூ.1 லட்சம் கொடுப்பதாக மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்தினர் எனவும் மோடி பேசினார்.
குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர்க்கட்சியினர் எதற்காக் கொண்டாடுகிறார்கள் என தெரியவில்லை? ரூ.1 லட்சம் கொடுப்பதாக மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்தினர் எனவும் மோடி பேசினார்.
பாஜக தலைமையிலான NDA கூட்டணி என்பது புதிய இந்தியா ( N - New India), வளர்ந்த இந்தியா ( D - developed india), லட்சிய இந்தியா ( A - aspirational india) என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
10 ஆண்டுகால பாஜக ஆட்சி வெறும் டிரெய்லர் தான். தேசத்தின் முன்னேற்றத்திற்காக இன்னும் முனைப்புடன் செயல்பட உறுதியேற்றுள்ளேன் எனவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கடந்த மூன்று மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையை விட, பாஜக இந்த முறை அதிக தொகுதிகளை வென்றுள்ளது. எதிர்க்கட்சிகள் சார்பில் வென்ற எம்.பிக்களுக்கும் வாழ்த்துகள், அவர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள் என நம்புகிறேன் என மோடி பேசினார்.
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளுக்கும் NDA ஆட்சி தான் இருக்கும். பாஜக கூட்டணி தோற்றுவிட்டதாக எதிர்கட்சிகள் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், நாங்கள் தோற்கவும் இல்லை, தோற்கவும் மாட்டோம் என மோடி சூளுரைத்தார்.
ஜனநாயகத்தின் தாய் இந்தியா என பாஜக சொல்கிறது. ஆனால், ஜனநாயகமே செத்துவிட்டதாக காங்கிரஸ் பேசி வருகிறது. இந்தியாவின் தேர்தல் நடைமுறை பற்றி ஒருதரப்பினர் குறைசொல்லி வருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைசொல்லி வந்தவர்கள், தற்போது அமைதியாகிவிட்டனர். பாஜக கூட்டணிக்கு கிடைத்திருக்கும் வெற்றி இமாலய வெற்றி என மோடி தெரிவித்தார்.
கூட்டணி கட்சி எம்.பிக்கள் மத்தியில் மோடி பேசுகையில், “அரசாங்கத்தை நடத்துவதற்கு மக்கள் பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். எனவே, ஒருமித்த கருத்தை நோக்கி நாம் பாடுபடுவோம் என்றும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எந்த நகர்வையும் முன்னெடுப்போம் என்றும் நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். நமது கூட்டணி 3 தசாப்தங்களை கடந்துள்ளது. இது சாதாரண விஷயம் இல்லை. இது மிகவும் வெற்றிகரமான கூட்டணி என்று என்னால் சொல்ல முடியும்” என தெரிவித்தார்.
பாஜக கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. எம்.பிக்கள் கிடைக்காவிட்டாலும் எங்களது வாக்கு சதவிகிதம் அங்கு அதிகரித்துள்ளது. இது எங்களுக்கு அங்கு நல்ல எதிர்காலம் இருப்பதையும், பாஜக தலைமையிலான ஆட்சி சரியான பாதையில் செல்வதையும் உணர்த்துகிறது” என தெரிவித்தார்.
கூட்டணி கட்சி எம்.பிக்களின் கூட்டத்தில் பேசிய மோடி, ”அரசியலமைப்பின்படி அனைத்து மதங்களும் சமன் என்பதால், அனைத்து மதத்தினருக்குமான ஆட்சியை நடத்துவோம். சிறந்த நிர்வாகத்திற்கு நிதிஷ்குமார், சந்திரபாபு உதாரணம்” என தெரிவித்தார்.
கூட்டணி கட்சி எம்.பிக்களின் கூட்டத்தில் பேசிய மோடி, “ ஆட்சியை நடத்த பெரும்பான்மை பலம் அவசியமில்லை. ஒருமித்த கருத்தே அவசியம். வாஜ்பாய் போன்ற தலைவர்களின் வழியில் வந்த நாங்கள் சிறப்பான கூட்டணி ஆட்சியை வழங்குவோம். கூட்டணி தர்ம அடிப்படையில் ஆட்சியை நடத்துவேன்” என்றார்.
கூட்டணி கட்சி எம்.பிக்களின் கூட்டத்தில் பேசிய மோடி, “நம் நாட்டில் 10 மாநிலங்களில் பழங்குடியின சகோதரர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த 10 மாநிலங்களில் 7ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. கோவா அல்லது வடகிழக்கு, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, அந்த மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.
மோடி பேசுகையில், “அனைவரும் ஒருமனதாக என்னை என்.டி.ஏ., தலைவராக தேர்வு செய்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு புதிய பொறுப்பை வழங்கியுள்ளீர்கள், நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒட்டுமொத்த நாட்டிற்கும் நான் பொறுப்பானவனாக நான் கருதுகிறேன். 2019 இல் இந்த சபையில் பேசுகையில், நீங்கள் அனைவரும் என்னை தலைவராக தேர்ந்தெடுத்தீர்கள். இன்றும் நீங்கள் இந்த பாத்திரத்தை எனக்கு வழங்குகிறீர்கள் என்றால், இந்த உறவு வலுவானது என்று அர்த்தம்” என தெரிவித்தார்.
கூட்டணி கட்சி எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மிகக் குறைவானவர்களே இதைப் பற்றி விவாதிப்பார்கள், ஒருவேளை அது அவர்களுக்குப் பொருந்தாது. ஆனால், இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்தின் வலிமையைப் பாருங்கள். இன்று, 22 மாநிலங்களில் ஆட்சி அமைக்கவும், பணியாற்றவும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாய்ப்பளித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
நாடளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்ற பெற்ற தி.மு.க. எம்.பி.க்கள். கூட்டம் நாளை (08.06.2024) மாலை 6.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாயலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணியின் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை தொடர ஜூன் 24ல் சட்டப்பேரவை கூடுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு - அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்துக்குப் பின் எத்தனை நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது. இதில் மோடி, கூட்டணியின் மக்களவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அமித் ஷா, நிதிஷ் குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தை தொடர்ந்து, மத்தியில் மீண்டு ஆட்சி அமைப்பதற்காக, குடியரசு தலைவரிடம் இன்றே மோடி உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் பெங்களூருவில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். அவருக்கும், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் ஷிவக்குமாருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் போலி ஆதார் கார்டுடன் நுழைந்த 3 பேரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறியியல் கல்லூரியில் சேர விண்ணபித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10 ஆம் தேதி வெளியாகிறது - கடந்த 2 ஆண்டுகளை ஒப்பீடும் போது நடப்பாண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 8.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கோவில்பட்டியில் மீன் கடை உரிமையாளர் மற்றும் நண்பர் இருவரையும் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த இருவரையும் கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் வரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Background
சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை ஜூன் 20 ஆம் தேதி ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராகவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் வரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதனால், பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றது. இந்நிலையில் 38 லட்சம் கோடி ரூபாய் பங்குச் சந்தையில் இழப்பு ஏற்பட்டது. போலியான கருத்துக் கணிப்புகள் மூலம், இந்த இழப்புகள் ஏற்பட்டன என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராவது ராகுல் காந்திக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -