தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள மின்சார வாரிய அலுவலக தெருவில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையும் பாரும் செயல்பட்டு வருகின்றது. இந்த மதுக்கடைக்கு வந்து மது குடித்துவிட்டு அந்தப் பகுதியில் அடிக்கடி தகராறு செய்து வருவதாகவும், இந்த மதுபான கடையின் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட தகராறின் காரணமாக வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் கூறி அரசு மதுபான கடை மற்றும் பாரால் உயிரிழப்பு ஏற்பட்டதாக புகார் கூறி பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10 தினங்களுக்கு முன்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.


EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!


தொடர்ந்து டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம் போன்றவற்றின் காரணமாக அந்தக் கடை சில தினங்கள் மூடப்பட்டிருந்தது. பின்னர் காவல்துறையினரின் தற்காலிக பேச்சுவார்த்தை காரணமாக போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டுச் சென்றிருந்தனர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக பலத்த எதிர்ப்பை மீறி தற்போது அந்த மதுபான கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மதுபான கடையை மூட வலியுறுத்தி கம்பம் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டிருந்தனர். ஆனால் போராட்டம் நடைபெறும் நேரம் வரை காவல்துறையினர் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில்,  இறுதியாக சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்தனர்.


BCCI: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி - ஒவ்வொரு வீரருக்கும் இத்தனை கோடிகளா? மொத்த லிஸ்ட் இதோ!


இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வாயில் கருப்பு நிற மாஸ்க் அணிந்தபடி போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து தமிழகத்தில் மதுபான கடையினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் மது கடைகளை மூட வலியுறுத்தியும் கம்பத்தில் பிரச்சினையாக இருக்கக்கூடிய அரசு மதுபான கடையை மூட வேண்டும் என்றும், தமிழக அரசை சந்திப்போம் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.


சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம்! புதிய கமிஷனர் யார்?


மேலும் தமிழகத்தில் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் சூழலில் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று நடத்தக்கூடிய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது என்றும் பேச்சுரிமையை பறிக்கும் விதமாக காவல்துறையினர் செயல்படுவதாக கூறி வாயில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து பாரதிய ஜனதா கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். உடனடியாக இந்த டாஸ்மாக் பிரச்சனைக்கு புள்ளி வைக்க வேண்டும் இல்லையென்றால் தங்களது போராட்டங்கள் தொடரும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.