தேனி மாவட்டம், தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளம், கம்பம், ஆண்டிபட்டி, போடி உள்ளிட்ட தொகுதிகளுக்குட்பட்ட திண்டுக்கல் மாவட்ட எல்லையில் இருந்து துவங்குவதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் பறக்கும் படையினர் தேனி மாவட்ட எல்லையான காட்ரோடு, வைகை அணை மற்றும் தேனி மாவட்ட முழுவதும் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Breaking News LIVE: பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் மாணவர்கள் - நடவடிக்கை எடுக்க ஆணை




இந்நிலையில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில், பண பட்டுவாடாக்களை தடுப்பதற்காக பறக்கும் படையினர் பயன்படுத்தும் வாகனங்களில், புதிதாக 360 டிகிரி கோணத்தில் சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு, பறக்கும் படையினர் எங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பதை  மாவட்ட  ஆட்சியர்  அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அரை அமைக்கப்பட்டு நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


PM Modi Speech: கட்சிக்காக உழைத்தவர்கள் கொல்லப்பட்டார்கள்: மேடையிலேயே நா தழுதழுத்த மோடி!




மேலும், தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க 3 குழுக்கள் மூலம் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ஒரு அணியும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணிவரை ஒரு அணியும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒரு அணி என 3 குழுக்கள் அமைக்கப்பட்டு தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி மாவட்டத்தில் உள்ள  பெரியகுளம், கம்பம், ஆண்டிபட்டி, போடி என 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


Prithviraj Sukumaran: “கேரளாவில் தமிழ் சினிமா எப்படி தெரியுமா.. உங்களுக்கு தான் இது புதுசு” - நடிகர் பிருத்விராஜ் பளிச்!




இந்த குழுவில் ஓரு அதிகாரி  தலைமையில் ஒரு பெண் காவலர் உட்பட 4 காவலர்கள் மற்றும் வீடியோ பதிவாளர் என தனித்தனியே பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு பறக்கும் படையில் தீவர கண்காணிப்பில் ஈடுபட்டு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தேனி மாவட்டம் கேரள எல்லையோர மாவட்டமாக இருப்பதால் இரு மாநில எல்லைகளான போடி மெட்டு, கம்பமெட்டு, தேவாரம், குமுளி எல்லைகள் வரையில் இருக்கும் மலையோர அடிவார பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்ப பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.