உசிலம்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் அ.தி.மு.க., நிர்வாகி காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 3 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்திய தேர்தல் பணி


நாடாளுமன்ற மக்களவ தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை முழுவேகத்தில் முடுக்கிவிட்டுள்ளன.  இந்நிலையில் உசிலம்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் அ.தி.மு.க., நிர்வாகி காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 3 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தேர்தல் களத்தில் தமிழகம்


தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை)தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.


தேர்தல் பறக்கும் படை


நாடு முழுவதும் 7 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது., தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அமலுக்கு வந்தனர். ஒவ்வொரு பகுதியிலும் பணப்பட்டுவாடாவை தவிர்க்கும் வண்ணம் மண்டல அளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தி ஆவணமின்றி எடுத்து செல்லப்படும் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பிரிவு கணவாய் கேட் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகரன் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது., அதிமுக கொடியுடன் கூடிய காரில் வந்த காராம்பட்டி அதிமுக கிளைச் செயலாளர் கிருபாகரன் என்பவரை இடை மறித்து சோதனை நடத்திய போது, காரில் மறைத்து வைத்திருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


உசிலம்பட்டியில் விசாரணை

 

உரிய ஆவணமின்றி எடுத்து வந்த 3 லட்சம் ரொக்கத்தை உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும் படை அதிகாரிகள் அதிமுக நிர்வாகியான கிருபாகரனிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lok Sabha Election: 40 தொகுதிகளுக்கும் விருப்பமனு பெறும் தே.மு.தி.க.! மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியா?


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Lok Sabha Election 2024: பணபட்டுவாடாவுக்கு செக்: திருவண்ணாமலை மாவட்டத்தில் களம் இறங்கிய 152 பறக்கும் படை