கொடி, சின்னம், லெட்டர் பேட் உரிமை வழக்கு ;


அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில், நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


Breaking News LIVE: பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் மாணவர்கள் - நடவடிக்கை எடுக்க ஆணை




மனு விசாரணை:


மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஒ.பி.எஸ். தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதத்து உத்தரவிட்டிருந்தார்.




கூட்டணி கட்சியினர் சந்திப்பு;


இந்நிலையில், இடைக்கால தடைக்காலம் முடிந்த நிலையில் தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஒபிஎஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.  இந்த நிலையில்  தமிழக முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர் செல்வம்  அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் தனிக்கட்சி துவக்க மனு அளித்துள்ள நிலையிலும் அதில் நிர்வாகிகள், உறுப்பினர்களை நியமித்து வரவுள்ள பாராளுமன்ற தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரனுடன் சந்திக்கவுள்ளார்.  


பிரதமரை வரவேற்க மாணவர்களை பயன்படுத்திய விவகாரம்; நடவடிக்கை எடுக்கப்படும் - ஆட்சியர் உறுதி




பழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்:


மேலும், இந்த கூட்டணி பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளது.  இந்நிலையில்  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.  அடிவாரத்தில் தனியார் விடுதியில் ஓய்வெடுத்த அவரை கட்சியின் நகர நிர்வாகிகள் வரவேற்றனர்.  பின்னர் மாலையில் ரோப்கார் மூலம் மலைக்கு சென்ற அவர் சாயரட்சையின் போது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை இராஜ அலங்காரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தங்கத்தேர் புறப்பாட்டிலும் பங்கேற்றார்.




பிரதமர் மோடி பெயரில் வழிபாடு :


தங்கத்தேருக்கு அவரது பெயரிலும், பாரத பிரதமர் மோடி பெயரிலும் பணம் செலுத்தி தங்கத்தேர் இழுத்தது குறிப்பிடத்தக்கது.  அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக அதிமுக கொடி, லெட்டர் பேட், இரட்டைஇலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்.சுக்கு நீதிமன்றம் மீண்டும் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து கேட்டபோது கேள்விக்கு பதிலளிக்காமல் புன்னகைத்தபடியே ஓபிஎஸ் சென்று விட்டார்.