கனமழையால் மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மஞ்சளார் ஆற்றில் 184 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில் மேலும் நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்பதால் மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரத்தில் கன மழை பெய்தது. இந்த மழையானது இரவு 11 மணி வரை நீடித்தது. இந்த நிலையில் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து திடீரென 184 கனஅடியாக உயர்ந்தது.
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
ஏற்கனவே மஞ்சளார் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டி 30 நாட்களுக்கு மேலாக முழு கொள்ளளவுடன் இருந்த நிலையில், அணைக்கு நீர் வரத்து இல்லாது இருந்தது. இதனிடையே கன மழையால் அணைக்கு நீர்வரத்து 184 கனஅடியாக அதிகரித்த நிலையில் அணைக்கு வரும் 184 கன அடி நீரை அப்படியே மஞ்சளார் ஆற்றில் பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டுள்ளனர். மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மஞ்சளார் ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளதோடு மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இன்றைய (நேற்று) நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 126.25 அடியாக இருந்தது. மழையின்மையால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 569.96 கன அடியாக இருந்தது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1511 கன அடியாக உள்ளது.
தேனி மாவட்டத்தில் மற்ற அணைகளின் இன்றைய நிலவரம்.
வைகை அணை
நிலை- 57.25 (71)அடி
கொள்ளளவு:3097Mcft
நீர்வரத்து: 1441கனஅடி
வெளியேற்றம் : 1199குசெக்வெசிட்டி:2511 Mcft
சோத்துப்பாறை அணை:
நிலை- 114.30 (126.28) அடி
கொள்ளளவு: 80.62 Mcft
நீர்வரத்து: 2 கனஅடி
வெளியேற்றம்: 3 கனஅடி
சண்முகநதி அணை:
நிலை-45.10 (52.55)அடி
கொள்ளளவு: 57.07Mcft
வரத்து: 0 கனஅடி
வெளியேற்றம்: 0 கியூசெக்.