திமுக கூட்டணியில் உள்ள விசிகவினரின் சிலர் கருத்துகள் அவ்வப்போது, சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், திமுக பவள விழா கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இந்நிலையில் திருமாவளவன் என்ன பேச போகிறார் என பலருக்கும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
திருமாவளவன் உரை:
பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது “ அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் இயக்கமாக திமுக உள்ளது. தேர்தலுக்காக மட்டும் செயல்படும் கட்சி திமுக இல்லை.
பவள விழா காணும் திராவிட முன்னேற்ற கழகம், இந்திய அளவில் அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு மகத்தான பேரியக்கமாக இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் இயக்கமாக திமுக உள்ளது. தேர்தலுக்காக மட்டும் செயல்படும் கட்சி திமுக இல்லை
கலைஞர் முன்னிலையில், தமிழர் தலைவர் ஆசிரியர் பேசினார். அப்போது திராவிட இயக்கத்தின் மூன்றாவது குழலாக விசிக இருக்கிறது என தெரிவித்தார். திராவிடர் கழகம் முதல், திமுக இரண்டாவது குழல், விசிக 3வது குழல் என தெரிவித்தார்.
”கட்டுக்கோப்புடன் கூட்டணி”
இந்த அணி தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அணி அல்ல. மக்கள் பிரச்சனைக்காக உருவாக்கப்பட்ட அணி. இந்த அணி கட்டுக்கோப்புடன் இயங்குகிறது என்றால் அதற்கு முழு காரணம் தளபதி ஸ்டாலின்.
பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது மூலம், அந்த முள்ளை எடுத்தவர் கலைஞர்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் அவரை சுற்றிதான் அரசியல் , ஆளும் கட்சியாக இருந்தாலும் அவரை சுற்றிதான் அரசியல் என 50 ஆண்டுகாலம் கலைஞரை சுற்றியே இருந்தது.
திருமாவளவன் வேண்டுகோள்:
முதல்வர் ஸ்டாலினை குடும்ப வாரிசு என்கிறார்கள். அவர் கருத்தியல் வாரிசு, பெரியார் வழியில் இயங்குகிறார், பெரியாரின் பேரன் அவர்.
” அண்ணா தற்போது இருந்தால் முதல்வர் ஸ்டாலினை தட்டிக் கொடுப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
இந்திய அளவில் கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்கம் திமுக. முதலமைச்சர் ஸ்டாலின் அரசு பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியாக நடக்கிறது.
பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை, அந்த முள்ளை எடுத்தவர் கலைஞர் , அது தற்போது நடைமுறையில் இருக்கிறது.