முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ள கேரள அரசை கண்டித்து மாநில எல்லையான குமுளியில் தமிழக விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் தமிழகத்தின் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள் உட்பட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணை 1895ம் ஆண்டு கட்டப்பட்டது. 128 ஆண்டுகள் பழமையான இந்த அணை வலுவிழந்துவிட்டதாகவும், அணை உடைந்ததால் கேரளாவில் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் எனவும் கேரள அரசு பல ஆண்டுகளாக தொடர்ந்து கூறிவருகிறது.
மாமூல் கேட்ட போலீஸ்; வைரலாகும் லஞ்சம் வாங்கும் வீடியோ - எஸ்பி அதிரடி நடவடிக்கை
இதற்கு தீர்வு முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவது தான் என கூறி வரும் கேரள அரசு, தற்போதுள்ள அணைக்கு கீழ் திசையில் 366 மீட்டரில் புதிய அணைக்கான இடம் தேர்வு செய்துள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்வதற்காக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு அளித்த விண்ணப்பத்தை நாளை மே 28ஆம் தேதியன்று (நாளை) நிபுணர் மதிப்பீட்டு குழுவின் பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
கேரள அரசின் இந்நடவடிக்கையை கண்டித்து இன்று தேனி மாவட்டத்தில் உள்ள இரு மாநில எல்லையான லோயர்கேம்ப் அருகே உள்ள பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடுகள் இயக்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாய அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கேரள மாநிலம் குமுளி பகுதியை முற்றுகையிட முயன்றனர்.
Vijay - Jason: “சினிமாவில் அப்பாவை போல எண்ட்ரீ.. நிச்சயம் சாதிப்பாய்” - விஜய் மகனை புகழ்ந்த ஸ்ரீமன்!
கூடலூர் அருகேயுள்ள லோயர்கேம்ப்-ல் இருந்து 6 கி.மீ தூரமுள்ள குமுளிக்கு "முல்லைப்பெரியாறு அணையை உடைக்க நினைக்கும் கைகளை உடைப்போம்" என்ற முழக்கங்களோடு ஊர்வலமாக சென்று கேரள மாநில எல்லையை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அப்போது போராட்டக்காரர்களை குமுளி சாலையில் பென்னிகுக் மணிமண்டபம் அருகில் காவல் துறையினர் நிறுத்தினர். கேரள எல்லை நோக்கி செல்ல விடாமல் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். பின்னர் போராட்டக்காரர்கள் அங்கேயே கேரள அரசை கண்டித்தும், கேரளாவின் புதிய அணை திட்டத்தை தடுத்து நிறுத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தால் தமிழகம், கேரளா இரு மாநில இணைப்பு சாலையான குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.