திண்டுக்கல் மாவட்டத்தில் பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து ஆண்டிப்பட்டி அருகே வைத்து அதன் பாகங்களை ஒவ்வொன்றாக திருடி விற்பனை செய்துவிட்டு, வாகனம் திருடு போனதாக நாடகமாடிய 5 பேர் கைது. தலைமறைவான மேலும் ஒருவருக்கு காவல்துறை வலைவீச்சு.
ஜெ.வுக்கு தெய்வ நம்பிக்கை உண்டு; மத நம்பிக்கை இல்லை: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சசிகலா
வாடகைக்கு எடுக்கப்பட்ட பொக்லைன் இயந்திரம்:
திண்டுக்கல் மாவட்டம், கணேஷ் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் கட்டுமான பணிகளுக்கான கனரக வாகன வாடகை வழங்கும் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இவரிடம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமக்காள்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் நாழிமலை குவாரியில் மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் கல் உடைக்க வேண்டி இருப்பதாக கூறி பொக்லைன் வாகனத்தை வாடகைக்கு பெற்று சென்றுள்ளார்.
Weather Report Today : சென்னை, காஞ்சி, செங்கையில் மழை முன்னறிவிப்பு என்ன? என்ன சொல்லுது வானிலை?
பொக்லைன் வாகனத்தை வாடகைக்கு எடுத்த நாள் முதல் சரிவர வாடகை தரவில்லை என்று தெரிகிறது. பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து நீண்ட நாட்கள் ஆன போதும் வாடகை தராததால் இது குறித்து வினோத்குமாரை சந்தித்து தனது பொக்லைன் இயந்திரம் மற்றும் வாடகை பணம் குறித்து பேசுவதற்காக ராமகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு குவாரிக்கு சென்றார். அப்போது பொக்லைன் இயந்திரத்தின் பல பாகங்கள் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது வினோத்குமார், பொக்லைன் இயந்திரம் திருடு போனதாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு பதறிப்போன ராமகிருஷ்ணன் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் . விசாரணையில் வினோத்குமார் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரத்தின் உதிரி பாகங்களை ஒவ்வொன்றாக கழட்டி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் லோகேஸ்வரன், சந்திர பாண்டி, தங்க கணேஷ், தினேஷ்(43) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய காமக்காள்பட்டியை சேர்ந்த ரகு என்பவரை தேடி வருகின்றனர்.