தமிழ்நாட்டில் சொந்தக் காலில் நிற்கும் கட்சிகள்தான் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு போட்டி போட வேண்டும். மிஸ்டுகால் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு போட்டி போட முடியாது என்று மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசினார்.


மேலும் படிக்க: Nayanthara Wedding Red Saree : லஷ்மி மோப்பு.. கோவில் பிரகார ஓவியம்.. நயன், சிவன் பேரு.. ஜொலித்த கல்யாணப்புடவையின் சீக்ரெட்ஸ் இவைதான்


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் மாநில உரிமைகள் மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 




திராவிட கழகம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாநில உரிமைகள் மீட்பு விளக்க பொதுக்கூட்டம் நடந்து வரும் நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பொதுக்கூட்டத்தில் பேசிய திராவிட கழக தலைவர் கி. வீரமணி, “மத்தியில் ஆளும் பாஜக அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் பறிக்கப் பட்டு வருவதை மீட்டு எடுப்பதே திராவிட மாடல் ஆட்சி, மாநிலம் என்றால் மக்கள், மக்கள் உரிமை, மனித உரிமை என்பதே. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிதான் எதிர்க்கட்சி என பொய் பரப்புரை செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க: ’சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மதச்சார்பற்ற அரசுக்கு என்ன வேலை?’ - வானதி சீனிவாசன் கேள்வி




மேலும் படிக்க: LKG UKG : எல்கேஜி, யூகேஜிக்கு பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களையே நியமிக்கக் கூடாது.. அரசுக்குக் கோரிக்கை


அவர்கள் எப்பொழுதும் தமிழ்நாட்டில் ஒரு கட்சியாக தான் இருக்க முடியும். எதிர்க்கட்சியாகவோ, ஆளுங்கட்சியாகவோ ஆக முடியாது. சொந்தக்காலில் நிற்கும் கட்சிகள் தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் இருக்க முடியும் மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக ஆக முடியாது. சமத்துவ சிந்தனை, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட பெரியாரின் சிந்தனையால் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக 100 ஆண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி” என்று பேசினார்.


தமிழ் சினிமாவில் ஆளும் கட்சி குடும்பத்தினரின் தலையீடு உள்ளது - நடிகர் ராதாரவி




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண