திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக நடிகர் ராதாரவி வருகை தந்தார். சாமி தரிசனம் செய்தபின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. தமிழகம் மட்டுமல்ல. இந்தியாவே ஒரு ஆன்மீக நாடு ஆகும். பாரம்பரிய வழிபாட்டு முறைகளை மாற்றக் கூடாது. பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்ததும், அதை திரும்ப பெற்றதுமே அதற்கு உதாரணம் என்றும், பழனிக்கோயிலுக்கு படிவழியில் செல்லும் பக்தர்களை செல்லக்கூடாது என எப்படி இருக்குமோ அதுபோலத்தான் பட்டின் பிரவேசத்தின் பாரம்பரிய வழிபாட்டு முறையில் தலையிடுவதும் என்று தெரிவித்தார்.
சிதம்பரம் கோயிலை பொறுத்த மட்டிலும் அங்கு அரசு சார்பாக சென்றால் பிரச்னை தான் எழும். அரசு அங்கு எதுவும் செய்ய முடியாது என்றும், சிதம்பரம்கோயில் அரசு நிதியை எதிர்பார்த்து இயங்கும் கோயில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்தார். திமுக ஒராண்டு ஆட்சி என்பதை பொறுத்த வரை எதுவும் சொல்வதற்கில்லை. இந்த அரசால் நான் எதுவும் அனுபவிக்கவில்லை. எனக்கு வேண்டியதை நான் செய்து கொள்வதால் எதுவும் தெரியவில்லை.
’சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மதச்சார்பற்ற அரசுக்கு என்ன வேலை?’ - வானதி சீனிவாசன் கேள்வி
தமிழக சினிமாத்துறையில் ஆளும்கட்சி தலையீடு உள்ளது என்பது உண்மைதான் என்றும், அதேவேளையில் தமிழ் திரைப்படங்களை அதிக தொகை கொடுத்து வாங்க ஆட்கள் இல்லை என்பதால் பெரிய, பெரிய படங்களை அதிக முதலீடு போட்டு அவர்கள் வாங்குகிறார்கள் என்பதும் உண்மைதான், தெலுங்கு திரை உலகில் பலர் சேர்ந்து சிண்டிகேட் போட்டு படத்தை வாங்குவதுபோல் தமிழகத்தில் செய்வதில்லை என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர் முதல் அனைவரையும் மரியாதையாக நடத்துகிறார்.
முதலில் எதிர்ப்பாக பார்த்தவர்கள் தற்போது நட்புடன் பார்க்கின்றனர். சமீப காலமாக நபிகள் பற்றி பேசிய பிரச்னையில் சிலர் தவறாக பேசியதை பெரிதாக்குகின்றனர். இந்த பிரிவினைவாத அரசியல் நல்லதல்ல. ஹிஜாப் பற்றி வளர்ந்த இஸ்லாமிய நாடுகளில் கூட யாரும் கண்டு கொள்வதில்லை என்றும், சவுதி, அபுதாபி பெரிய இஸ்லாமிய நாடுகளே முன்பு இந்துக்கள் பொட்டு வைத்தால் அதை அழிக்க சொன்ன காலம் போய் அவர்களை அதை கண்டு கொள்வதில்லை. இருவர் செய்யும் பிரச்னையை இரண்டாயிரம் பேர் செய்ததாக கூறுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்