தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றம் என்ற கம்பம் நடும் விழா சென்ற 17ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு உகந்த வேப்ப இலை மற்றும் மஞ்சள் கலந்த புனித நீரை கொடிகம்பத்தில் ஊற்றி கெளமாரி அம்மனை வழிபட்டனர்.
பிரசித்திபெற்ற தேனி வீரபாண்டி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
தேனி மாவட்டம் வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரிசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 8 நாட்கள் வரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றம் எனப்படும் கம்பம் நடும்விழா கடந்த 17ம் தேதி நடைபெற்றது.
KKR vs DC LIVE Score: சொந்த மண்ணில் டெல்லியை வீழ்த்துமா கொல்கத்தா? டப் கொடுக்குமா ரிஷப் படை?
இதனை தொடர்ந்து கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடி கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டு வருவர். வரும் மே 07.05.2024 அன்று முதல் திருவிழா துவங்கி 14.05.2024 அன்று நிறைவு பெறும். இன்று கம்பம் நடும் இந்நிகழ்ச்சியில் முன்னதாக வண்ணி மரத்தில் மூன்று கிளைகள் உள்ள சிவன் அம்சமாக உள்ள கொடி மரத்திற்கு முல்லைப்பெரியாற்றில் வைத்து கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்து ஊர்வலமாக கோவிலுக்கு கம்பம் கொண்டுவரப்பட்டு பின்னர், மூலஸ்தனத்திற்கு முன்னதாக உள்ள கம்பம் நடும் மேடையில் கம்பம் நடப்பட்டது.
இந்த திருவிழாவிற்காக எதிர்வரும் 07.05.2024 முதல் 14.05.2024 வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10.05.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுவதால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த துறைகள் மற்றும் அனைத்து விதமான கல்வி நிலையங்களுக்கும் 10.05.2024 அன்று உள்ளுர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது. இந்த உள்ளுர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம்-1881 Negotiable Instruments Act-1881) கீழ் வராது என்பதால், அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் தலைமை கருவூலம் (Huzur Treasury), சார்நிலை கருவூலகங்கள் மற்றும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேலும் மேற்குறிப்பிட்ட உள்ளுர் விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் 25.05.2024 அன்று மாற்று வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.