தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றம் என்ற கம்பம் நடும் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு உகந்த வேப்ப இலை மற்றும் மஞ்சள் கலந்த புனித நீரை கொடிகம்பத்தில் ஊற்றி கெளமாரி அம்மனை  வழிபட்டனர்.


Lok sabha Election: ஓய்ந்தது பரப்புரை! முடிவுக்கு வந்த தலைவர்களின் அனல் பறந்த பிரச்சாரம் - ஓட்டுப்போட தயாரான மக்கள்




தேனி மாவட்டம்  வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரிசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 8 நாட்கள் வரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றம் எனப்படும் கம்பம் நடும்விழா இரண்டு ஆண்டுகளுக்கு பின் இன்று நடைபெற்றது.


TN 10th 12th Result 2024: 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்


கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியதையடுத்து இன்று முதல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடி கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டு வருவர். வரும் மே 07.05.2024 அன்று முதல் திருவிழா துவங்கி 14.05.2024 அன்று நிறைவு பெறும். இன்று கம்பம் நடும் இந்நிகழ்ச்சியில் முன்னதாக வண்ணி மரத்தில் மூன்று கிளைகள் உள்ள சிவன் அம்சமாக உள்ள கொடி மரத்திற்கு முல்லைப்பெரியாற்றில் வைத்து கம்பத்திற்கு சிறப்பு  பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்து ஊர்வலமாக கோவிலுக்கு கம்பம் கொண்டுவரப்பட்டு பின்னர் , மூலஸ்தனத்திற்கு முன்னதாக உள்ள கம்பம் நடும் மேடையில் கம்பம்  நடப்பட்டது.




ABP C Voter Opinion Poll: தமிழ்நாடு- கேரளாவில் யாருக்கு வெற்றி வாய்ப்பு - ABP- சி வோட்டர் கணிப்பு முடிவுகள் வெளியானது


பின்னர் புனித நீர் ஊற்ற புல்லன் பெத்தணன் வம்சத்தார்கள் அம்மன் கரகம் எடுத்து அரிவாள் மீது ஏறி தன்னைத் தனோ சாட்டையால் அடித்து அருள்வாக்கு சொல்லி  புனித நீர் எடுத்து வர பக்தர்கள் முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அம்மனுக்கு உகந்த வேப்ப இலை மற்றும் மஞ்சள் கலந்த புனித நீரை கம்பத்தில் ஊற்றி கௌமாரியம்மனை வழிபட்டனர். மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இதனை அடுத்து திருவிழா நாட்களில் பக்தர்கள் தீ சட்டி எடுத்தல், ஆயிரம்கண்பானை எடுத்தல், உள்ளிட்ட நேர்த்திகடன் செலுத்து அம்மனை வழிபடுவது வழக்கம்.