தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்கிற மழை நீர் சிறு சிறு ஓடைகள் வழியாக வழிந்தோடி வந்து கும்பக்கரை ஆற்றை அடைகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை, கொடைக்கானல், வட்டக்கானல் பகுதியில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Congress Releases 500 Cr: பாஜகவின் முன்னாள் அமைச்சரின் புகைப்படத்தோடு ரூ.500 கோடி நோட்டை வெளியிட்ட காங்கிரஸ்... எதற்காக தெரியுமா?



அருவியில் ஏற்பட்டுள்ள பெருக்கை வன ஊழியர்கள் தீவிரமாக கண்காணிக்கும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கும்பக்கரை ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கும்பக்கரை ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் என வனத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Pugar petti: தூர்வாரப்படாத வடிகால்கள்... மழைநீரில் மிதக்கும் பூம்புகார் கிராமம்! கண்டுகொள்ளுமா அரசு?


AUS vs AFG T20 WC: சாவு பயத்த காமிச்சிட்டாங்களா? - 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கனை வீழ்த்திய ஆஸ்திரேலியா


அதே போல தேனி மாவட்டத்திலுள்ள சின்ன குற்றாளம் என அழைக்கப்படுவது சுருளி அருவி. இந்த சுருளி அருவிக்கு நீர்வரத்து வரும் தூவானம், மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடுமையான தொடர் கனமழை பெய்துவரும் நிலையில்  அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுருளி அருவியில் இன்று முதல் அருவிக்கு சென்று குளிக்கவோ அல்லது பார்க்கவோ செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.