தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவழை முடிந்து வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த மாதம் 29 -ம் தேதி தாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் கூட தற்போது தமிழகம், புதுச்சேரி, காரைக்காலின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு தொடங்கிய மழையானது தற்போது வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏறக்குறைய மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி உள்ளது. 




UGC NET Result 2022: வெளியான அறிவிப்பு; யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு; பார்ப்பது எப்படி?


கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 19 சென்டிமீட்டர் மழையும், குறைந்த பட்சமாக மயிலாடுதுறை 2.4 சென்டிமீட்டர்  மழை பதிவாகி இருந்தது. மேலும் பல இடங்களில் கணிசமான அளவு மழை பெய்து இருந்தது.  இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் மீனவர் கிராமத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் அங்குள்ள உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி அங்கு வசிக்கக்கூடிய வீடுகளிலும் தண்ணீர் உள்ளே சென்றுள்ளது. 


மேலும் வீட்டின் வைத்திருந்த பொருட்களான அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டில், பாத்திரங்கள் என அனைத்தும் தண்ணீரில் மிதக்கின்றன. விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். வடிகால் வசதி முறையாக இல்லாததால் தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


 




வீடுகளில் உள்ளே தண்ணீர் சென்றதால் அங்கு வசிக்கக்கூடிய மக்கள் குடிநீர், உணவு இல்லாமல் தவிக்கின்றனர். குழந்தைகளை வைத்து கொண்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள மக்கள், உடனடியாக போர்க்கால அடிப்படையில் வடிகால் வசதிகளை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் வடிகால்களை தூர்வாரி வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.


உங்கள் பகுதிகளிலும் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளனவா?


ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் எழுதி அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம். வெளியே பெயர் கூற விரும்பாத புகார்தாரரின் விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படாது.