ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய ஆப்கன் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான். இதையடுத்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கன் விளையாடியது.
முன்னதாக, ஆஸ்திரேலியா அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், கிரீன் ஆகியோர் களமிறங்கினர். 3வது ஓவரில் கிரீன் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அப்போது அவர் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிரடி வீரர்களான வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிகபட்சமாக, மேக்ஸ்வெல் 54 ரன்களும், மிட்செல் மார்ஷ் 45 ரன்களும் எடுத்தனர்.
ஸ்டாய்னிஸ், வார்னர் தலா 25 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன்-உல்-ஹக் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை சுருட்டினார். அடுத்தபடியாக ஃபசல்ஹக் ஃபரூக்கி 2 விக்கெட்டுகளை அள்ளினார்.
இவ்வாறாக அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரகமனுல்லா குர்பாஸ் 30 ரன்கள் எடுத்தார். உஸ்மான் கனி, இப்ராகிம் ஜத்ரான், குல்பதின் நயிப் ஆகியோரும் இரட்டை இலக்க ரன்களுடன் நடையைக் கட்டினர். கடைசி ஒரு ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்ற நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தது ஆப்கானிஸ்தான். 1 விக்கெட்டை எடுத்து ரஷித் கான் மட்டும் நின்று விளையாடினார்.
கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து பலனில்லை. ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.