தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றம் என்ற கம்பம் நடும் விழா சென்ற மாதம் 17ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு உகந்த வேப்ப இலை மற்றும் மஞ்சள் கலந்த புனித நீரை கொடிகம்பத்தில் ஊற்றி கெளமாரி அம்மனை  வழிபட்டனர்.




ஸ்ரீகௌமாரியம்மன் கோவில் திருவிழா:


தேனி மாவட்டம்  வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரிசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 8 நாட்கள் வரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றம் எனப்படும் கம்பம் நடும்விழா கடந்த 17ம் தேதி நடைபெற்றது.


அதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழா இன்று கோலகலமாக துவங்கியது. மே 14ம் தேதி வரை எட்டு நாட்கள் நடக்கும் இரவு பகலாக  இத்திருவிழாவில், பக்தர்கள் முல்லைப் பெரியாற்றில் நீராடி மேள தாளங்களுடன் அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை சமர்ப்பித்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடனகளை செலுத்தி வருகின்றனர். பக்தர்களுக்கான பேருந்து போக்குவரத்து, மருத்துவம், சுகாதாரம், கழிவறை, குடிநீர் வசதிகளோடு அவசர சிகிச்சைக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


NEET: எதுவானாலும் தயங்காமல் கேள்; முதலமைச்சர் அளித்த உறுதி - பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கையின் விருப்பம்!


உள்ளூர் விடுமுறை:


விழாவின் சிறப்பு நிகழ்வாக மே 10ம் தேதி நடக்கும் திருத்தேர் ஊர்வலத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சஜீவனா உத்தரவிட்டுள்ளார். விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக உணவுப் பொருட்களில் துவங்கி, ராட்டினங்கள் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. விழா ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, வீரபாண்டி பேரூராட்சி, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் செய்துள்ளனர்.


kodaikanal: கொடைக்கானல் போறீங்களா..? - கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க..!


MK Stalin: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்” - திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு!


பேருந்து வசதி:


இக்கோவில் திருவிழாவிற்கு தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தரகள், பொதுமக்கள் வருகை தருவார்கள். இதனால் போக்குவரத்து அதிகளவில் பேருந்துகள் பயன்படும். அதேபோல் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் அதனை தடுக்கும் வகையில், வீரபாண்டி வழியாக செல்லும் அனைத்துப் பேருந்துகளும் வீரபாண்டியில் நின்று பக்தர்கள் இறங்கி ஏறும் வகையில் செயல்பட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


திருவிழாக்காலமான இன்று 07.05.2024 முதல் 14.05.2024 முடிய தேனியிலிருந்து சின்னமனூர் மார்க்கத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் உப்புக்கோட்டை விலக்கு , மார்க்கையன்கோட்டை விலக்கு, குச்சனூர், வழியாக மாற்றுப்பாதையில் சின்னமனூர் செல்லும், மேலும், சின்னமனூரிலிருந்து தேனி மார்க்கத்தில் வரும் அனைத்து வாகனங்களும் உப்பார்பட்டி பிரிவிலிருந்து தாடிச்சேரி, தப்புக்குண்டு, கொடுவிலார்பட்டி வழியாக தேனி வந்தடையும். கோவில் வளாகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு ஏதுவாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.