நீட் தேர்வில் இடம் கிடைக்கும் என்று நம்புவதாக,  முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற திருநங்கை நிவேதா தெரிவித்துள்ளார்.


முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறியதாவது:


''இத்தனை லட்சம் ஆண்கள், பெண்களுக்கு மத்தியில், ஒரே ஒரு திருநங்கையாக நான் 12ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.


முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் என்னைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பாராட்டு தெரிவித்தனர். உயர் கல்விக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தருவதாக, முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். எதுவானாலும் தயங்காமல் கேள் என்று கூறி உள்ளார். நீட் தேர்வை எழுதி இருக்கிறேன். நல்ல மதிப்பெண்கள் வரும், சீட் கிடைக்கும் என்று நம்புகிறேன்''.


இவ்வாறு திருநங்கை நிவேதா தெரிவித்துள்ளார்.


12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 6) வெளியான நிலையில், 94.56 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7.6 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவர் ஸ்வேதா தேர்வு எழுதிய நிலையில், அவர் தேர்ச்சி பெற்றுளார்.