தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்கிற மழை நீர் சிறு சிறு ஓடைகள் வழியாக வழிந்தோடி வந்து கும்பக்கரை ஆற்றை அடைகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை, கொடைக்கானல், வட்டக்கானல் பகுதியில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிக்கு   செல்ல சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


South Facing House Vastu: தெற்கு பார்த்த வாசல் வீடு: வாஸ்துவும் - ஜாதகரின் வெற்றியும் !!! தோல்வியும் !!



பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். கடந்த சில நாட்களாக அருவியில் நீர்வரத்து சீராக இருந்தது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அருவியின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை பெய்தது.


Chhattisgarh elections 2023: சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நாளில் குண்டு வெடிப்பு - சிஆர்பிஎஃப் வீரர் காயம்



திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா? - பிறந்த நாளில் கமல்ஹாசன் சொன்ன சூசக பதில்!


இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினர் தடை விதித்தனர். அருவியில் நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து அருவியில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் இன்று 4 வது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளனர்.