South Facing House Vastu in Tamil: வீட்டிற்கு  வாஸ்து என்பது மிகவும் முக்கியம்.  ஒரு வீட்டின் வாஸ்து அந்த வீட்டில் வாழும் மனிதர்களின் என்ன ஓட்டங்களையும்,  அவர்கள் வாழ்வில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்களையும் தீர்மானிக்கும்  சக்தி படைத்தது.  


வீடு பராமரிப்பு ஏன் முக்கியம்?


என்னுடைய அனுபவத்தில்  ஜாதகருக்கு கெட்ட நேரம் வரும்போது   வீட்டை இடித்து கட்டுவது  பொருட்களை மாற்றி வைப்பது,  வாசலை இடித்து வேறு பக்கம் வைப்பது,  வீட்டிற்கு முன் மணல் கொட்டி வைப்பது,  சாக்கடை தண்ணீர் தேங்கும்படி செய்வது, பாழடைந்த வீடு போல காட்சி அளித்தாலும் அதை புதுப்பிக்காமல் அப்படியே விடுவது,  வீட்டை காற்றோட்டம் இல்லாமல் பொருட்களை வைத்து அடைத்து வைப்பது  இப்படி வீட்டிற்கு வாஸ்து தோஷத்தை உருவாக்குவதன் மூலம் அந்த  வீட்டில் வாழும் ஜாதகருக்கு கெட்ட நேரத்தை கொண்டு வர வைக்க முடியும். 


தாயின் கர்ப்பத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது.  அதை ஜாதக கட்டத்தில் 4  பாவம் ஆக வைத்துள்ளனர். நம் முன்னோர்கள்.  அதே நான்காம் பாவம் தான் நாம் வாழும் வீட்டையும் குறிக்கிறது.  தாயின் கர்ப்பப்பையும்  நான்காம் பாவகத்தில் வைத்த நம் முன்னோர்கள்.  ஜாதகரின் வாழ்க்கையில் நன்மையும் தீமையும் அவர் வாழும் இல்லத்தின்  வாஸ்துவையும் வைத்து  தீர்மானிக்கப்படுவதாக கூறுகின்றன.


உதாரணமாக  ஒருவர் ஜாதகத்தில் நான்காம் பாவத்தில் குரு இருந்தால்,   அவர் விஸ்தாலமான  அறைகளைத் தான் தன்னுடைய வீட்டில் கட்ட வேண்டும்.  குறுகலான,  குறுகிய சிறிய அறைகளை கட்டக்கூடாது .  ஜாதகர் வசிக்கும் வீட்டில் காற்றோட்டம் நிறைந்திருக்க வேண்டும்.  அப்படி இல்லாமல் ஜாதகர் சிறிய வீட்டில் காற்றோட்ட வசதி இல்லாமல் வாழ்ந்தால்,  அவர் வாஸ்து தோஷத்தில் சிக்கி இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  இப்படி வாஸ்துவை வைத்து, அவருடைய ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களையும் வைத்து அவர் நல்ல முன்னேற்றத்தை நோக்கி செல்கிறாரா அல்லது தோஷங்களை  ஏற்படுத்தி வீழ்ச்சி அடைகிறாரா என்பதை நம்மால் அறிய முடியும். 


தெற்கு பார்த்த வாசல் வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? (South Facing House Vastu in Tamil)


தெற்கு திசை எமனுக்குரிய திசை என்று கூறி  வீடு கட்டுவோர் அந்த திசையை பார்த்தாலே பயப்படுவது உண்டு.  குறிப்பாக வயதானவர்கள் வீடு கட்டினால்,  தெற்கு திசையை நோக்கி வாசலே வைக்கக்கூடாது  என்று அந்த திசையின் பக்கமே போக மாட்டார்கள். காரணம் விரைவாக மரணம் நிகழ்ந்து விடும் என்ற பயத்தால்.


தெற்கு பார்த்த வாசல் வீட்டால் மரணம் நிகழுமா ? 


பதில், நிச்சயமாக இல்லை!!! 


பெரிய கோடீஸ்வரர்களின்  வீடுகளைப் பார்த்தால் அவர்கள் தெற்கு நோக்கித்தான் வாசலை அமைத்திருப்பார்கள்.  அப்படி தெற்கு பார்த்த வாசல் வீட்டை கட்ட வேண்டும் என்றால்,  அதற்கான முறையான வாஸ்துவை வைத்து தான் அந்த வீட்டை கட்ட வேண்டும்.  தென்-மேற்கு குபேரன் இருக்கும் இடம்,  தெற்கு திசை குரு பகவானுக்கு உகந்த திசை,  அப்படி அனைத்தையும் வைத்துப் பார்த்தால் தெற்கு திசை ஒருவரை கோடீஸ்வரனாக மாற்றும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடுகளும் இல்லை. 


மகாலட்சுமி -  கோடிகளில் பொருளும் பணத்திற்கு அதிபதி. குரு பகவான் - ஆயிரம் ஆயிரம் கோடிகளை குறிக்கும் பணத்திற்கு அதிபதி.  குரு பகவானுக்கு உகந்த திசை தெற்கு  தெற்கு பார்த்த வாசலை கட்டினால்  ஆயிரம்  கோடிகளில் புரளக்கூடிய பணத்தை  குருவானவரே வீட்டிற்கு கொண்டு வருவார் என்பது தான் சாஸ்திரம் கூறும் உண்மை. 


அப்படி என்றால்  தெற்கு பார்த்த வாசல் வீடு மரணத்தை கொண்டு வராது, மாறாக கோடிகளை கொண்டுவரும் என்பதே உண்மை.  மரணம் என்பது அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப தான் நிகழும்.  ஒருவருக்கு விரைவாக மரணம் நிகழப் போகிறது என்றால்  அவர் தோஷம் நிறைந்த வாஸ்து உள்ள வீட்டில் தான் வாழ்ந்து வருவார்.  அதை ஒரு வாஸ்து நிபுணர்  பார்த்தாலே சுலபமாக கண்டுபிடித்து விடலாம். 


வாஸ்துபடி எந்த திசையில் என்ன  அறை இருக்க வேண்டும்? 


பூஜை அறை -  கிழக்கு,  வடகிழக்கு மேற்கு 


ஹால் - வீட்டின் மையப் பகுதியில் இருக்கலாம்


சமையலறை-  வட மேற்கு, தென் கிழக்கு 


படுக்கும் அறை -  மேற்கு,   தெற்கு தென்மேற்கு 


தண்ணீர் தேங்கும் இடம் அல்லது தண்ணீர் நிரப்பும் இடம்  அல்லது தண்ணீர் தொட்டி -   வடகிழக்கு 


கழிப்பறை -  வடகிழக்கு, தோஷம் இல்லாமல் வாஸ்துவை  அமைக்க மேலே சொன்ன திசைகளை நீங்கள் பயன்படுத்தலாம். 


தெற்கு பார்த்த வீட்டில்  என்ன செய்யக்கூடாது? 


சுவர் விரிசல் விட்டபடி இருக்கக் கூடாது,  வடகிழக்கில் நீர் தேங்கி இருக்கக் கூடாது,  வீட்டிற்கு முன்பாக ஒற்றை  சீதாப்பழ மரம் நடக்கூடாது.  வீட்டிற்குப் பின்பாக ஒற்றை தென்னை மரம் இருக்கக் கூடாது. தெற்கு பார்த்த  வீடுகளை சிம்ம கர்ப மனைகள் என்று அழைப்பார்கள்.  எந்தெந்த ராசிகளுக்கு  தெற்கு பார்த்த வாசல் பொருந்தும்  கன்னி,  சிம்மம், விருச்சகம்,  ரிஷபம்  மகரம்,  தனுசு.  


தெற்கு பார்த்த வீட்டின் நிறம் ?


மஞ்சள் வண்ணத்தை பயன்படுத்துவது  சிறந்தது.  தெற்கு குரு பகவானுக்கு உகந்த திசை  என்பதால் அவருடைய வண்ணமான மஞ்சளை பயன்படுத்துவது சிறப்பைக் கொண்டு வரும்.  வீட்டிற்கு வெளியில் பச்சை  நிறத்தை அடிப்பதை தவிர்ப்பது நல்லது.  குரு பகவான் உயிர் கிரகம் என்பதால் அனைத்து  உயிர்களுக்கும் தெற்கு பார்த்த வீடு நன்மையே கொண்டு வரும்.