கம்பத்தில் இரு வேறு இடங்களில் சட்டவிரோடமாக விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல். கடைகளுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


போதைப் பொருள்:


தமிழக கேரள எல்லையோர மாவட்டமாக உள்ளது தேனி மாவட்டம்,  கேரள மாநிலத்தவரின் வர்த்தக தேவைக்காக கேரள மக்கள் அதிகமானோர் தினந்தோறும் தேனி மாவட்டத்திற்கு குறிப்பாக கம்பம், போடி பகுதிகளுக்கு வருவது வழக்கம். அப்படி வரும் மக்களை குறிவைத்து சிலர் போதை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் கஞ்சா உட்பட. அதுமட்டுமல்லாமல் பல்வேறு சட்ட விரோதமான செயல்களிலும் ஈடுபட்டு வருவதை தடுக்க இரு மாநில போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!




 போலீஸ் சோதனை:


இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் நகரில் புகையிலை பொருட்களான புகையிலை, கூல் லிப், போதை பாக்கு போன்றவற்றினை ஒழிப்பதற்காக காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.   இன்று தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கம்பம் வடக்கு மற்றும் தெற்கு காவல் துறையினர் இரண்டு இடங்களில் சோதனை மேற் கொண்டனர்.


Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்


200 கிலோ போதைப்பொருள் பறிமுதல்:


இதில் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நந்தகோபாலன் கோவில் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கண்ணன் என்பவரது வீட்டினை சோதனை செய்த போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான புகையிலை, கூலிப், போதை பாக்கு போன்றவகைகள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததற்காக கண்ணன் என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தம் 200 கிலோ இருந்துள்ளது.




இதனை அடுத்து கம்பம் வடக்கு காவல்துறையினர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று கம்பம் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேல் கொண்ட போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இதேபோன்று புகையிலை, கூல்-லிப், போதைப்பாக்கு போன்ற வகைகள் இருந்தது தெரியவந்தது. அதனையும் பறிமுதல் செய்த கம்பம் தெற்கு காவல் துறையினர் கைதான கண்ணன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் 3 லட்சத்திற்கு மேல் இருக்க கூடும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.