Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க வழக்கு; இன்றிரவே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி

Breaking News LIVE, June 6: நாடு முழுவதும் இன்றைய பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை, உடனுக்குடன் அறிய ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் தொடர்ந்து இணைந்திருங்கள்

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 06 Jul 2024 08:32 PM
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க வழக்கு; இன்றிரவே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி

ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த வழக்கை  அவசர வழக்காக இன்றிரவே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்

குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியதில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

Breaking News LIVE : சாத்தான்குளம் கொலை வழக்கு - காவலர் தாமஸுக்கு இடக்கால ஜாமின்

சாத்தான் குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவலர் தாமஸுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


மகள் திருமணத்திற்காக ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்த வழக்கில் தாமஸுக்கு 4 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த மருத்துவமனைக்கு வந்த மாரி செல்வராஜ்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சிலரால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து எம்பார்மிங் செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ளது. 


இந்நிலையில் இயக்குநர் மாரிசெல்வராஜ் மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளார். 

ஜூலை 23ம் தேதி மத்திய அரசு பட்ஜெட் தாக்குதல்

மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக அமைந்த பிறகு மத்திய அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையை வரும் ஜூலை 23ம் தேதி தாக்குதல் செய்கிறது.

Breaking News LIVE : ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு -  ராணுவ வீரர் வீர மரணம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். மேலும் காஷ்மீர் மண்டல காவல்துறையின் கூற்றுப்படி, குல்காமின் மோடர்காம் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. ராணுவம் மற்றும் காவல்துறையின் கூட்டுப் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சிக்கியுள்ளனர்.






BSP Armstrong : பொதுமக்கள் அஞ்சலிக்காக பள்ளியில் வைக்கப்படுகிறது ஆம்ஸ்ட்ராங் உடல்..

சென்னை, பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் - வேதனையும் அடைந்தேன். அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி ஏராளமான இளைஞர்களின் கல்விக்காகவும் - ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் களத்தில் உழைத்த ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் மரணம், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பாகும்.



இந்தக் கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை நேற்று இரவு கைது செய்துள்ளது. மேலும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். சகோதரர் ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் – குடும்பத்தினர் – நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Footballer Tony Kroos : ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி குரூஸ்!

அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி குரூஸ்!

உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும் - திருமாவளவன்

BSP Armstrong Murder : விசிக தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு;-


அவரது கட்சி அலுவலக வளாகத்திற்குள் அவரது உடல் நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதனை அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,


கொலையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இப்பொழுது சரணடைந்து இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை , அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். சரண் அடைந்தவர்களை கைது செய்ய கைது செய்து விட்டோம் என்ற அடிப்படையில் புலன் விசாரணை நிறுத்தி விடக்கூடாது..


உண்மையான குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். பொதுமக்களுக்காக தலையீடுபவர் அதற்காக அவருக்காக ஆங்காங்கே பகை எழுந்து இருக்கிறது.. அதற்குரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கி இருக்க வேண்டும், ஆனால் வழங்கவில்லை அது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் தலித்துக்கள் தலித் இளைஞர்கள் குறிப்பாக தமிழக தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடிக்கிறது.. இன்று ஒரு அரசியல் தலைவர் அவரது இல்லத்தின் அருகிலேயே கொல்லப்பட்டிருக்கிறார் இது காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால்..


கூலிப்படைகளை சாதியவாதி கும்பலை கொலைகார கும்பலை அடையாளம் கண்டு அவர்களை கட்டுப்படுத்த தவறினால் அரசுக்கு மேலும் இதனால் களங்கம் ஏற்படும்..

Kannada Actor Darshan : பச்சிளம் குழந்தைக்கு கைதி உடை அணிவித்த பெற்றோர்.. தீவிர தர்ஷன் ரசிகர்கள் மீது நடவடிக்கை

கன்னட நடிகர் தர்ஷன் மீது கொண்ட ரசிக மனப்பான்மையால், பச்சிளம் குழந்தைக்கு கைதி உடை அணிவித்த தம்பதி. பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் முடிவு..

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சரணடைந்தவர்கள் கொலையாளிகள் அல்ல - திருமாவளவன் பேட்டி

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில், சரணடைந்தவர்கள் கொலையாளிகள் அல்ல என விசிக தலைவர்  திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

நீலகிரி, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூரில் மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு. -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

DMK Protest against Criminal Laws : திமுக சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம்

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்துவருகிறது. 

Mayawati Comes to Chennai : ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அனைவரும் அமைதி காக்க வேண்டும் , நாளை சென்னை வருகிறேன் - மாயாவதி

Armstrong Murder Mayawati Condolences : BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என, பகுஜன் சமாஜ்வாதி கட்சி தேசிய தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

Lincoln Book of Records : நெருப்பு மற்றும் எண்ணெய் இல்லாமல் 500க்கும் மேற்பட்ட உணவு வகைகள் செய்து அசத்திய சிவக்குமார்

குறைவான நேரத்தில் நெருப்பு மற்றும் எண்ணெய் இல்லாமல் 500க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து உலக சாதனை படைத்தார் கோவையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சிவக்குமார். இந்த நிகழ்வை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகிகள் ஆய்வு செய்து, சாதனைச் சான்றிதழ் வழங்கினர்.

Gold Rate : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு

Breaking News LIVE, July 6: தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

 Tamilnadu Rain : Breaking News LIVE, July 6: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், சில பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

VCK State Party : விசிக மாநில கட்சியாக அந்தஸ்து : அரூரில் மாவிளக்கு ஊர்வலம்..

விசிக மாநில கட்சியாக அந்தஸ்து பெற்றதால்  - அரூர் அருகே தேர் இழுத்து மாவிளக்கு ஊர்வலத்தோடு 1000 -ம் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்- அம்பேத்கரின் திருவுருவ சிலையை சுற்றி 200-ம் மேற்பட்ட தேங்காய்கள் உடைத்தனர். நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைசிறுத்தைகள் கட்சி  சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதியில் பாணை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.


இதையடுத்து அக்கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது. இதை கொண்டாடும் விதமாக தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நவலை கிராம மக்கள் சுமார் 1000-ம் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கரின் உருவப்படம் டிராக்டரில் வைத்து ஊர்வலமாக ஓட்டி வந்தனர். 

திரு. ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் தருகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் கூராய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடுமையான நடவடிக்கை வலியுறுத்தி தொண்டர்கள் கோஷம்

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் தி.மு.க. இன்று உண்ணாவிரதம் நடத்துகிறது.

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் தி.மு.க. இன்று உண்ணாவிரதம் நடத்துகிறது. இதில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்

திரு. ஆம்ஸ்ட்ராங் படுகொலை : அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது - விஜய்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.


திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம்.. எங்கு எங்கு தெரியுமா?

கோவை கிங்ஸ் அணி வெற்றி

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லைகா கோவை கிங்ஸ் அணி.


முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது.


142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 


ஆட்ட நாயகனாக 63 ரன்கள் எடுத்த சச்சின் தேர்வு.

BSP Armstrong Murder : ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த, இன்று நேரில் வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த, இன்று நேரில் வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி

Background


  • சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் - ஆற்காடு பாலு என்ற ரவுடி உட்பட 8 பேர் போலீசில் சரண்

  • தமிழ்நாட்டில் சட்ட - ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் - குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை

  • சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கொட்டிய கனமழை - வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

  • வாயில் வடை சுடுகிறார் - நம்பிக்கை துரோகி.. எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இடையே கடும் வார்த்தை மோதல்

  • விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், 10ம் தேதி பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு

  • பாதுகாப்புத்துறை உற்பத்தியில் இந்தியா இதுவரை இல்லாத அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது - அமைச்சர் ராஜ்நாத் சிங்

  • பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் - 14 பொறியாளர்கள் பணியிடைநீக்கம்

  • ஆனந்த் அம்பானி - ராதிக திருமண சங்கீத் நிகழ்ச்சி -  ஏராளமானா திரை மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பங்கேற்பு

  • இங்கிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியை சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்பு - ரிஷி சுனக் தலைமையிலான பழமைவாத கட்சி படுதோல்வி

  • இங்கிலாந்தின் முதல் தமிழ் வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரானார் உமா குமரன் - முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து 

  • கனடா ஓபன் பேட்மிண்டன் - காலிறுதியில் திரிஷா - காயத்ரி  ஜோடி தோல்வி

  • ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் - ஜெர்மனியை வீழ்த்தி அரையிறுதிக்கு முண்ணேறியது ஸ்பெயின்

  • டி.என்.பி.எல்., சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி கோவை கிங்ஸ் அபார வெற்றி

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.