பழனி கோவிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்காவில் இளைஞர்கள் கஞ்சா குடிப்பது போலவும் ,கஞ்சா போதையில் விழுந்து கிடப்பது போல இன்ஸ்டாகிராமில் ரீல்ல் செய்து வெளியிட்டுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து ரீல்ஸ் செய்த இளைஞர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யும் பழக்கம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் வயது வரம்பில்லாமல் இருந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் உட்பட தங்களது விளம்பரத்திற்காக ரீல்ஸ் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அந்த வகையில் 2k கிட்ஸ் சமூக வளைதலங்களில் ரீல்ஸ் செய்வது அதிகம். ரீல்ஸ் செய்வது சிலரின் திறமையை வெளிக்கொண்டு வந்தாலும் பலரது ரீல்ஸ் வீடியோ முகம் சுழிக்க வைக்கும் சூழலே ஏற்படுத்தியுள்ளது.
அப்படி திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு உட்பட்டது தேவஸ்தான சிறுவர் பூங்கா. பழனி-கொடைக்கானல் சாலை அருகே உள்ள இந்த சிறுவர் பூங்காவில் மூன்று நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சில இளைஞர்கள் கையில் கஞ்சாவை வைத்து தேய்ப்பதும் பின்னர் கஞ்சாவை குடித்துவிட்டு பின்னர் கஞ்சா போதையில் சிறுவர் பூங்காவில் ஆங்காங்கே கிடப்பது போலவும் சித்தரித்தும், இளைஞர்கள் அவர்களின் நண்பரை தூக்கிச் செல்வது போலவும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீட்டு அந்த வீடியோ சமூக வளைதலங்களில் வைரலானது. இந்த வீடியோ வைரலானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த ரீல்ஸ் தொடர்பான வீடியோ குறித்து பழனி நகர போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்த சூழலில் வீடியோ வெளியிட்ட நபர்களையும் போலீசார் தேடி வந்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கஞ்சா வியாபாரியையும் போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில் பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு,கார்த்தி, பாலசுப்ரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகிய 6 நபர்களை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கஞ்சா புகைக்க பயன்படுத்திய Bong(புகையிலை உறிஞ்சி) கைப்பற்றப்பட்டு வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா புகைக்கும் ரீல்ஸ் வீடியோ சம்பந்தமாக பாலசமுத்திரத்தை சோந்த மணிகண்டன் , மதி மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய அடுத்து இணையத்தில் பாலசமுத்திரத்தை சோந்த பாஸ்கர் மற்றும் முத்துராஜா ஆகியோர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தனிப்படையினர் தேடி வருகின்றனர்.