தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கன்னியபிள்ளைபட்டி, மாயாண்டிபட்டி, கொத்தபட்டி, கதிர்நரசிங்கபுரம், மொட்டனூத்து, பாலக்கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் மல்லிகைப்பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் மல்லிகை பூக்கள் ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஒருநாளைக்கு ஒரு டன் அளவில் மல்லிகை பூக்கள் இங்கு விற்பனைக்காக வருகிறது.


Happy Birthday MS Dhoni: ஹேப்பி பர்த்டே மஹி.. நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடிய தோனி.. மனைவி பகிர்ந்த வீடியோ..!




முகூர்த்த நாட்கள், விழா நாட்களில் உச்சம் தொடும் மல்லிகை பூக்கள் விலை, பிறநாட்களில் போதுமான விலை கிடைக்காமல் போகிறது. இதனால் மல்லிகைப்பூ சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது முகூர்த்த நாட்கள் இல்லாத நிலையில் ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மல்லிகைப்பூ அனுப்பப்பட்டு வருகிறது.


நான்காவது மனைவி... மூன்றாவது கணவர்... ஓட்டல் அறை பிரச்னையால் பிரபல நடிகையை மணக்கும் நடிகர்!




இளையராஜாவுக்கு எம்.பி பதவி: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்!


அதன்படி ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.250 வரை வாசனை திரவிய தொழிற்சாலைக்கு கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது முகூர்த்தம் மற்றும் பிற விசேஷ நாட்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்திருந்தது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட மல்லிகைப்பூவை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டோம். இதற்கிடையே தற்போது வாசனை திரவிய தொழிற்சாலை சார்பில் மார்க்கெட்டில் இருந்து நேரடியாக மல்லிகைப்பூவை கிலோ ரூ.250 வரை கொள்முதல் செய்கின்றனர். இதனால் நிரந்தரமான விலை கிடைக்கிறது என்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண