நடிகர் நரேஷ் பாபு தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களுள் ஒருவர். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரரும், மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மகனும் ஆவார். நரேஷ் பாபு தெலுங்கு திரையுலகில் தனக்கெனத் தனியிடத்தை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவருடைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் தீயாய்ப் பரவி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. 


மனைவியுடன் ஏற்பட்ட தகராறு :


ரம்யா ரகுபதி நடிகர் நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி ஆவார். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மனக்கசப்பினால் இத்தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவிற்கு நரேஷுக்கு நடிகை பவித்ரா லோகேஷ் உடன் ஏற்பட்ட தொடர்பே காரணம் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. 60 வயதான நடிகர் நரேஷ் பாபு இரண்டு நாட்களுக்கு முன்பு சக நடிகை பவித்ரா லோகேஷ் உடன் ஒரே ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார்.இந்த தகவல் அறிந்த அவரது மனைவி ரம்யா ரகுபதி அங்கு நேரில் சென்றுள்ளார். கணவரின் இந்நடவடிக்கையை கண்டித்து தகாத வார்த்தைகளால் பேசி, நரேஷ் பவித்ரா ஆகியோரை செருப்பால் அடிக்க முற்பட்டார்.


யார் இந்த பவித்ரா லோகேஷ்?




கன்னட திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் நடிகை பவித்ரா லோகேஷ். இவர் கன்னடத்தில் 150-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். அது மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் தற்போது அம்மா கதாபாத்திரத்தில் அதிகம் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் நடிகை அபர்ணாவிற்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பவித்ரா லோகேஷிற்கு  ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆகி விவாகரத்து ஆகியுள்ளது. பின்னர் மூன்றாவது ஆக நடிகர் நரேஷ் பாபுவை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியது.


ஹோட்டல் அறையில் நடந்தது என்ன?




இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் நரேஷ் பாபு நடிகை பவித்ரா லோகேஷ் உடன் மைசூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறையில் தங்கியுள்ளார். இந்த விஷயம் அறிந்த அவரது மனைவி ரம்யா ரகுபதி நடு இரவில் அந்த ஹோட்டலுக்கு சென்று அவர்கள் தங்கி இருந்த அறையின் கதவை தட்டியுள்ளார்.  இச்சம்பவம்  குறித்த தகவல் அறிந்து போலிசாரும் ஊடகவியலாளர்களும் ஹோட்டலுக்கு விரைந்துள்ளனர். அடுத்த நாள் காலை நடிகர் நரேஷ் பாபுவும் பவித்ரா லோகேஷ்  அறையை விட்டு வெளிவந்தனர்.


அப்போது ரம்யா ரகுபதி கணவர் நரேஷ் பாபுவை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் அவர்கள் இருவரையும் ரம்யா செருப்பால் அடிக்க முற்பட்டார். அருகில் இருந்த போலீசார் அவரைத் தடுத்துள்ளனர். மேலும் நடிகர் நரேஷ் பாபு அறையை விட்டு வெளியே வந்து ரம்யாவை கேலி செய்து விசில் அடித்துக் கொண்டே லிப்டில் ஏறிச் சென்றார். காரில் ஏறும்போது ஊடகத்தினர் கேட்ட கேள்விக்கு தனது மனைவி ரம்யா ஒரு ஃப்ராடு என்றும் அவர் மேல் ஏற்கனவே இரண்டு குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தானும் பவித்ரா லோகேஷும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு தரப்பில் இந்த ஜோடிக்கு ஏற்கனவே ரகசிய திருமணம் ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது