தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள கம்பம் அருகே 15 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றுலா தலமாக அமைந்துள்ளது சுருளி அருவி. பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் இந்த அருவியில், ஆனந்த குளியல் போது வரும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்பார்கள் அருவிக்கு சென்று திரும்புபவர்கள், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதிக்குள் 20 அடி உயரம் கொண்ட இந்த அருவி வனப்பகுதியிகளிலிருந்து வரும் தண்ணீர் மூலம் அருவியாக உருவெடுத்துள்ளது.


DIG Vijayakumar: கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை காரணம் இதுவா? - டிஜிபி சங்கர் ஜிவால் சொன்ன தகவல்..!



இந்த அருவி அமைந்துள்ள இடமானது சுற்றுலாத்தலமாக மட்டுமல்லாமல் ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்குகிறது. காரணம் இந்த அருவிக்கு செல்லும் நுழைவுவாயிலில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது.  ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்கும் இத்தளத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் தற்போதும் வாழ்ந்து வருவதாகவும் ஐதீகம் ஆதலால் இறந்த முன்னோர்களுக்கு திதி போன்ற ஈமச் சடங்குகளை செய்வதற்கு இங்கு கூடும் கூட்டத்திற்கு அளவே இல்லை என்றும் குறிப்பிடலாம். ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாளன்று இறந்த முன்னோர்களுக்கு ஈமச்சடங்கு செய்வதற்கு உள்ளூர் வெளியூர் அல்ல வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து கூட ஏராளமான மக்கள் இங்கு வருவது வழக்கம் அப்படி செய்யப்படும் ஈமச் சடங்குகளின் போது இந்த அருவியில் குளித்து விட்ட பின்னரே வீடு திரும்ப வேண்டும் என்பது வழக்கமாக இருந்து வருகிறது.


என்றென்றும் தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்... வாழ்த்து மழை பொழிந்த முதலமைச்சர் ஸ்டாலின்!



பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்.. திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் தலைவர் கார்கே!


இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி ஹைவேவிஸ் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று காலை முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிப்பகுதி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.