தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் மதுரை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அணைக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், வருசநாடு, வெள்ளிமலை, கொட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர்வரத்தாக உள்ளது. இதற்கிடையே அணையில் இருந்து கடந்த மாதம் முதல் வாரத்தில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.


மேலும் படிக்க: Ford Protest: "மனசாட்சி இல்லையா.." உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் திடீரென வெளிய வந்ததால் பரபரப்பு..




இதனால் கடந்த ஒரு ஆண்டாக 60 அடிக்கும் மேல் நீடித்த அணையின் நீர்மட்டம் தற்போது 52 அடியாக குறைந்தது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1015 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க: Udhayanidhi Stalin : 'கருணாநிதி, மு.க.ஸ்டாலின் வரிசையில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதத் தொடங்கிய உதயநிதி’ திமுக பொருளாளர் ஆகிறாரா..?




மேலும் படிக்க: Thirumavalavan MP : ”எல்.முருகனும், திரௌபதி முர்முவும் கூண்டுக்கிளி, கோயில் யானை போலத்தான் செயல்படமுடியும்” : திருமா காட்டம்!


இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 608 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 869 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதே போல் முல்லை பெரியாறு அனையில் நீர் வரத்தானது 700 கன அடியாகவும் , நீர் மட்டமானது 128 அடியாவும் உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் மட்டம் உயரும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.