தேனி மாவட்டம், ஆண்டிபட்டி உட்கோட்டம், மயிலாடும்பாறை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட, காமன்கல்லில் இருந்து கோம்பைதொழு ரோடு செல்லும் இடத்தில் உள்ள முருகன் என்ற கீரிபட்டி முருகன் (31) என்பவரின் தோட்டத்து வீட்டில் கஞ்சா மற்றும் கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மயிலாடும்பாறை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சாகுல்ஹமீது மற்றும் காவலர்கள் உதவியுடன் முருகன் என்ற கீரிபட்டி முருகன் தோட்டத்து வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

Continues below advertisement


Vadakkan Teaser : ”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!




அப்போது, 4 கிலோ கஞ்சா மற்றும் கள்ள நாட்டு துப்பாக்கி இருந்ததை கைப்பற்றி நிலையம் கொண்டு வந்து எதிரி மீது மயிலாடும்பாறை காவல் நிலைய 5. 66/2017 ល 8(C) r/w 20(b), (II) (B) NDPS Act & 25 (1-A) Act 601 1 பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


இவ்வழக்கின் இறுதியறிக்கை கடந்த 01.12.2020 அன்று தாக்கல் செய்யப்பட்டு மேற்படி வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதன்மை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 24.04.2024ம் தேதி மேற்படி எதிரி முருகன் என்ற கீரிபட்டி முருகன் (31), த.பெ. பெரியகருப்பதேவர், குமணன்தொழு, ஆண்டிபட்டி என்பவரை மதுரை மாவட்ட முதன்மை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்ற கூடுதல் நீதிபதி A.S.ஹரிஹரகுமார், B.L., அவர்களால் குற்றவாளி 67601 அறிவிக்கப்பட்டு எதிரிக்கு 4 கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டணையும்,


TN Weather Update: உஷார் மக்களே! 18 மாவட்டங்களில் கொளுத்தப்போகும் வெயில்.. எச்சரிக்கும் வானிலை!




ரூபாய் 40,000/- அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் 1 வருட மெய்காவல் சிறை தண்டணையும், கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டணையும், ரூபாய் 10,000/- அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் 1 வருட மெய்காவல் தண்டணையும் ஏக்காலத்தில் அனுபவிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்தார்.