மதுரை - போடி இடையே 90 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மீட்டர் கேரேஜ் ரயில் பாதை திட்டம் தொடங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் விளையும் காபி, தேயிலை, ஏலக்காய் உள்ளிட்ட விளை பொருட்கள், இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய் போன்ற பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும், தேனி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், வணிகர்களுக்கு தேவையான சரக்குகளை கொண்டு வருவதற்கும் இந்த ரயில் பாதை திட்டம் மிகவும் பயன் அளித்தது. இந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது.


ரயில் மூலம் தென்காசி வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு... 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் !


அதன்படி, சுமார் 10 வருடங்களுக்கு மேலாக தற்போது மதுரை, போடி அகல ரயில்பாதை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளில் தேனி வரை பணிகள் முடிந்து பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. போடி வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 2ம் தேதி ரயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. போடியில் இருந்து தேனி வரையிலான 15 கி.மீ. தூர தண்டவாள பாதையில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் ரயில் என்ஜின் இயக்கப்பட்டது.


Gujarat, Himachal Pradesh Election Result LIVE: இரு மாநிலங்களிலும் பாஜகவின் முதல்வர் வேட்பாளர்கள் வெற்றி..!


அப்போது ரயில் என்ஜின் 9 நிமிடங்கள் 20 நொடிகளில் 15 கி.மீ. தூரத்தை கடந்தது. இதையடுத்து தேனி, போடி ரயில் பாதையில் ரயில் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறதா? வேறு ஏதேனும் சிறு குறைபாடுகள் இருக்கிறதா? என்பதை கண்டறிய அடுத்தக்கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்காக நவீன ஆய்வு ரயில் பெட்டி ரயில்வே துறையில் உள்ளது. அதிவேகத்தில் ரெயில் செல்லும் போது ஆய்வு முடிவுகளை இந்த ரயில் பெட்டியில் உள்ள கணினி உடனுக்குடன் பதிவு செய்து வெளியிடும்.


TN Rain Alert: சென்னைக்கு 580 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் மழை!



Gujarat Election Results 2022: எடுபடாத பஞ்சாப் யுக்தி: பஞ்சராகிய ஆம் ஆத்மி - குஜராத்தில் பாஜக சாதனை வெற்றி!


அதன்படி, தேனி-போடி இடையேயான ரயில் பாதையில் நவீன ஆய்வு ரயில் பெட்டியுடன் 125 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்தில் இந்த சோதனை நடக்கிறது. எனவே இந்த அதிகவேக தொழில்நுட்ப ஆய்வு நடக்கும் நேரத்தில் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவல் தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண