TN Rain Alert: சென்னைக்கு 580 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் மழை!

TN Rain Alert: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “மாண்டஸ்” புயல்; சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

Continues below advertisement

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கிமீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மாண்டாஸ் புயலாக வலுப்பெற்றது.

Continues below advertisement

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:

அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி, பொன்னேரி, சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், மாதவரம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், ஊத்துக்கோட்டை, வாலஜாபாத், கும்மிடிப்பூண்டி,திருவள்ளூர், செய்யூர், குன்றத்தூர், மதுராந்தகம், உத்திரமேரூர், அமைந்தக்கரை, செங்கல்பட்டு, மதுரவாயல், பூவிருந்தவல்லி, திருக்கழுகுன்றம், திருப்போரூர், அம்பத்தூர், வண்டலூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல்:

"Mandous" புயல் நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்க கடலில் வடகிழக்கில் இருந்து சுமார் 370 கி.மீ திருகோணமலைக்கும்,  (இலங்கை), யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே 500 கிமீ தொலைவில் (இலங்கை), காரைக்காலில் இருந்து கிழக்கே 560 கிமீ தொலைவில், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 640 கிமீ தொலைவில் உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் டிசம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவில் காற்று வீசக்கூடும்.

தற்போதைய நிலவரப்படி  தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “மாண்டஸ்” புயல் கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை 02.30 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடலில் அமைந்தது. 

இது காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 530 கீ.மி மற்றும் சென்னைக்கு தென்கிழக்கே 620 கீ.மி தொலைவில் உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் டிசம்பர் 9 நள்ளிரவில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்

இதன் காரணமாக இன்று தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 9 ஆம் தேதி பொறுத்தவரை,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையுடன் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  

10 ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 3 துறைமுகங்களில் இரண்டு மற்றும் நான்கு புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது.  எண்ணூர், தூத்துக்குடி,  பாம்பன் உள்ளிட்ட ஆறு துறைமுகங்களில் இரண்டாம் புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது. 

2 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு, புயல் உருவாகி உள்ளது என்பதை குறிக்கிறது அதேவேளையில் நான்காம் எண் துறைமுகம் மற்றும் கடல் பகுதிகள் சுற்றியுள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை செய்வது ஆகும்

Continues below advertisement
Sponsored Links by Taboola