திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிவாடி பேரூராட்சி வீரபுடையான்பட்டியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 17 மாணவிகள் 8 மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று மதிய உணவு உண்ணும் பொழுது மாணவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் பல்லி இருந்ததால்  25 மாணவ, மாணவியர்கள் கன்னிவாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Deep Depression: மக்களே உஷார்.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் அதிகரிப்பு...சில மணிநேரங்களிலே புயல்..


இப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதம் அடைந்த நிலையில் இருந்ததால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டுவதற்காக வகுப்பறைகள் இடிக்கப்பட்டது இதனை அடுத்து திறந்தவெளி கலையரங்கத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மழை நேரங்களில் அருகில் உள்ள கோவில்களில் வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. வகுப்பறைகள் இடிக்கப்பட்ட நிலையில் சத்துணவு கூட மட்டும் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் மராமத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டு சத்துணவு கூடம் மட்டும் சிமெண்ட் சீட் சேதம் அடைந்த நிலையிலேயே இடிக்காமல் உள்ளது.


உதயநிதி ஸ்டாலினை 'பிளே பாய்' என விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை


கட்டிடத்தில் தண்ணீர் வசதியோ மின்விளக்குகள் வசதிகள் எதுவும் இல்லாததால் அக்கட்டிடத்தில் இன்று மதிய உணவு சமைக்கும் பொழுது சமைத்த உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை கவனிக்காத சத்துணவு பணியாளர்கள் மாணவர்களுக்கு உணவை வழங்கினார்கள். மாணவர்கள் மதிய உணவு உண்ணும் பொழுது ஒரு மாணவியின் சாப்பாட்டு தட்டில் பல்லி இருந்தது. இதைக் கண்ட சத்துணவு பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தது. இதன் பெயரில் 25 மாணவர்களும் கன்னிவாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Pre Matric Scholarship: சிறுபான்மை மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்குக: பிரதமருக்கு முதல்வர் கடிதம்


MCD Results 2022: பதினைந்து வருட பாஜக ஆட்சியை பதம் பார்த்த ஆம் ஆத்மி: டெல்லி மாநகராட்சியை கைப்பற்றி அசத்தல்


உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்லி விழுந்த உணவை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.  மேலும் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் பொழுது, சமையலறையில் மின்விளக்கு வசதி தண்ணீர் வசதி எதுவுமே இல்லை எனவும், புதிய பள்ளி கட்டிடம் உடனடியாக கட்டித் தர வேண்டும் எனவும் இல்லை என்றால் அதுவரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண