தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை 152 அடி உயரம் கொண்டது. அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பிரதானமாக நெல், வாழை, தென்னை, மருத்துவ குணங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை என விவசாயம் சார்ந்த பகுதியாகும்.
இதில், முக்கிய பங்காக நெல் விவசாயம் இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில் காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1166 கன அடி வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 511 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இனிமேல் தான் உதயா என்ற நண்பன், உதயநிதி ஸ்டாலின் என்ற பெயரை.... நடிகர் விஷால் கூறியது என்ன?
அணையின் இருப்புநீர் 7396 மில்லியன் கன அடியாக உள்ளது. பெரியாறு அணையில் ரூல்கர்வ் நடைமுறையில் உள்ளதால், ரூல்கர்வ் விதிப்படியே தண்ணீர் நிலை நிறுத்தப்படும். இந்நிலையில் பெரியாறு அணையில் டிசம்பர் 1 முதல் 20 வரை 141 அடி தண்ணீர் வரை நிலை நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 141 அடி உயர்ந்ததால் கேரள பகுதிகளுக்கு தமிழக பொதுப்பணி துறையினரால் இரண்டாம் கட்டவெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குளித்தலை அருகே திமுகவை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
ஓரிரு நாட்களில் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான வளிமண்டல சுழற்சி வலுவடைந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.